#Job Interview: "tell me about yourself" கேள்விக்கு எவ்வாறு சிறப்பாக பதிலளிப்பது? கைதேர்ந்த நிபுணர் கூறும் சூட்சமம்!
  • 17:11PM Aug 08,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:11PM Aug 08,2019 India

பொதுவாக கல்லூரியிலும், கல்லூரி முடித்து வெளியில் வேலைக்கு செல்லும்போது நேர்காணலில் கேட்கப்படும் "tell me about yourself" கேள்விக்கு பதில் சொல்வதில் தான் முக்கால்வாசி வெற்றி அடங்கியிருக்கிறது. அதனை வைத்து தான் நேர்காணல் அடுத்தடுத்த நிலைக்கு செல்லும். எடுத்து வைக்கும் முதல் அடி, எப்படி தெளிவாக எடுத்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார் உமாசங்கர். இந்த வழிமுறைகளை எல்லாம் பின்பற்றி தேர்வு அடையாமல் போனவரும் உண்டு. இதில் எதையுமே பின்பற்றாமல் சுலபமாக தேர்வு அடைந்தவரும் உண்டு. அதனால் இதில் பெரிதாக கவனம் செலுத்தாமல் அறிவை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தினால் வெற்றி நமதே.

#1. முதலாவதாக யாராக இருப்பினும் மிகவும் எளிமையாக பேசக்கூடியது தன்னை பற்றி தான். அதனால் தான் முதலில் உங்களைப் பற்றி கூறுங்கள் என்று கேட்டு சூழ்நிலையை எளிதாக்குகிறார்கள். அதனால் அந்த அவகாசத்தை உங்களை அமைதிப் படுத்திக் கொள்ளவும். அந்த சூழ்நிலைக்கு பழக்கப்படுத்திக் கொள்ளவும்.

#2. ஒருவரது தொடர்பு ஆற்றலையும், மொழி திறனையும், உடல் மொழியையும் இந்தக் கேள்வியின் மூலமாக எளிதாக அறியலாம். அதனால் இம்மூன்றையும் சிறப்பாக வைத்துக் கொள்ளுதல் நலம்

#3. மூன்றாவதாக உங்கள் ரெஸ்யூமை படித்துக்கொண்டிருக்கும்போதே உங்களைப் பற்றி மேலோட்டமாக தெரிந்து கொள்வதற்கு கேட்கப்படுகிறது. இதில் நீங்கள் உங்களைப் பற்றி மேலோட்டமான தகவல்களையும் ரெஸ்யூமில் குறிப்பிடப்படாத தகவல்களையும் உங்கள் பலம், பொழுதுபோக்குகள் உள்ளிட்ட எதைப் பற்றி வேண்டுமானாலும் கூறலாம்.இந்த பதில் மிகவும் சிறியதாகவும் மிகவும் பெரியதாகவோ இருக்கக் கூடாது.

#4. அடுத்தது நேர்காணலை நீங்கள் விரும்பும் திசையில் எடுத்துச் செல்ல உதவும் ஒரு பொன்னான வாய்ப்பு. அதாவது வேலைக்கு பெரிதும் சம்பந்தம் இல்லாத ஆனால் குறிப்பிடத்தக்க விஷயங்கள் (நாவலாசிரியர் பாடகர், உலகம் முழுவதும் சுற்றுலா சென்ற நபர், சமூக சேவகர்) எதையாவது நீங்கள் செய்திருந்தால் அதை தாராளமாக இந்த பதிலில் குறிப்பிடலாம். நேர்காணல் எடுப்பவர் அதில் ஆர்வம் கொண்டவராக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். நேர்காணலில் பெரும்பகுதி அதை நோக்கிச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

#5. குறிப்பிட்ட திசையில் அல்லது விஷயத்தில் உங்களுக்கு ஆர்வம் ஆற்றல் அல்லது பயிற்சி இருந்தால் அதைக் குறிப்பிடலாம். உங்கள் குறிக்கோள்களை பற்றியும் குறிப்பிடலாம். அந்த நிறுவனத்தில் அல்லது அந்த வேலையில் நீங்கள் ஏன் சேர விரும்புகிறீர்கள் அதற்கான தகுதி உடையவராக நீங்கள் ஏன் இருக்கிறீர்கள் என்பது போன்ற வற்றையும் குறிப்பிடலாம். ஆக கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் குறிப்பிடுவதற்கு உங்களுக்கு வாய்ப்பு உண்டு.

#6. மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும் அல்லது நேர்காணல் எடுப்பவரின் மனதில் உங்களை நிலைநிறுத்தும் விஷயங்களை குறிப்பிடுவது சிறந்தது. பெரும்பாலான , சேவை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில்(Infosys, cts, TCS, Wipro போன்ற) உங்கள் அறிவும் திறமையும் எந்த அளவு பயன் தருமோ அதே அளவு நேர்காணல் செய்பவரின் மனதில் நீங்கள் இடம் பிடிப்பதும் அதே அளவு பயன் தரும்.

#7. உங்களைப் பற்றி நீங்கள் எந்த அளவு தன்னம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் அடக்கமாகவும்( சற்றே குழப்பமான கூட்டாக இருந்தாலும் சரியான பதத்தில் அதை மேற்கொள்வது தான் வெற்றிக்கு வழிவகுக்கும்) நினைக்கிறீர்கள் வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது முக்கியமான அம்சம்.

#8. உங்களது முக்கியமான சாதனைகளை அல்லது திறமைகளை அழுத்தி கூறுவதற்கான சந்தர்ப்பம் இது. ஒரு நாளில் பலரை நேர்காணல் செய்பவர்கள் ஒன்றிரண்டு விஷயங்களை கவனிக்காமல் விடுவது இயல்பு.

#9. அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் அல்லது வேலையின் தேவைப்படும் திறமைகளுக்கு அல்லது அனுபவத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து பதில் கூற வேண்டும். இது நீங்கள் அந்த நிறுவனத்தைப் பற்றியும் வேலையைப் பற்றியும் அறிந்து வைத்துள்ளீர்கள் என்பதையும் அதற்கு நீங்கள் பொருத்தமானவர் என்பதை எடுத்துக்காட்டும்.

#10. ஒரு பொதுவான பதிலை முன்னரே தயார் செய்து கொண்டு போனாலும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்தல் வேண்டும். நேர்காணல் எடுப்பவர் ஆர்வமாக கேட்டுக் கொண்டே இருந்தால் பதிலை முடிந்த அளவு பெரிதாக்குவது தவறில்லை.முன்னரே சொன்னது போல இருக்கு ஆனால் எந்த திசையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானிப்பது இதுதான். நேர்காணல் எடுப்பவர் அடுத்த கேள்விக்கு செல்ல தயாராகி விட்டதை உணர்த்தினால் பதிலை முடிந்த அளவு சுருக்கிக் கொள்ள வேண்டும்.

#Job Interview: மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் சேவை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களுக்கு பெரிய அளவிலும் product சார்ந்த நிறுவனங்களுக்கு சிறிய அளவிலும் பயன்படும். ஆனால் தயாரிப்பு சார்ந்த நிறுவனங்களில் உங்கள் அறிவும் திறமையும் தான் பெரும் பங்கு வகிக்கும். FACEBOOK-ல் உலகெங்கம் உள்ள 2647 காலிப் பணியிடங்கள்!!! APPLY LINK உள்ளே!

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top