ATM CHIP CARD: CHIP பொருத்திய புதிய ATM CARD-களை வாங்குவது எப்படி??? அப்படி வாங்கிய ATM CARD-களை ACTIVATE செய்வது எப்படி???
  • 19:29PM Jan 02,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:29PM Jan 02,2019 Chennai

உங்னுடைய ATM CARD, CHIP பொருத்தப்படாததாக இருக்கும் பட்சத்தில், இன்றே செயல்பட்டிருக்காது. RBI அறிவிப்புப்படி CHIP பொருத்தப்படாத ATM CARD-கள் நேற்று நள்ளிரவு முதல் செயல்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது. இதனால், இன்று உங்கள் வங்கியில் வழங்கப்படும் புதிய CHIP BASED ATM CARD இருந்தால்தான் இனி உங்களால் ATM-லிருந்து பணம் எடுக்க முடியும். முதலிலேயே வாங்கியிருந்தாலும், உங்கள் CARD-களை ACTIVATE செய்யாமல் இருந்தாலும் தொடர்ந்து படியுங்கள். காரணம், பழைய கார்டை வங்கியில் எப்படி மாற்றுவது, புதிய கார்டை எப்படி ACTIVATE செய்வது என்று நாம் பார்க்கப் போகிறோம். முதலில் கார்டு வாங்குவது. உங்கள் பழைய ATM CARD-ஐ எடுத்துக் கொண்டு உங்கள் வங்கியில், நீங்கள் ACCOUNT வைத்திருக்கும் BRANCH-ற்கு உடனே செல்லுங்கள். அங்கே ஒரு FORM-ல் உங்கள் பழைய ATM CARD NUMBER, ACCOUNT NUMBER இரண்டையும் குறித்து, உங்கள் பழைய ATM CARD-டன் இணைத்து வங்கியில் கொடுத்துப் புதிய ATM CARD-ஐப் பெற்றுக் கொள்ளலாம்.

வங்கியில் உங்களுக்குக் கொடுக்கப்படும் கவரில் புதிய ATM CARD, PIN NUMBER-டன் இருந்தால் ரொம்ப நல்லது. வாங்கிக் கொண்ட பிறகு சிறிது நேரம் கழித்து உங்கள் பழைய கார்ட் BLOCK செய்யப்பட்டதாக உங்கள் REGISTERED MOBILE NUMBER-ல் ஒரு செய்தி வரும். அவ்வளவுதான். பொதுவாக ஒரு கார்டு வங்கியால் PROCESS செய்யப்பட இரண்டு நாட்களாகும். இரண்டு நாட்கள் கழித்து அந்த ATM CARD-ஐ சொருகி, PIN NUMBER போட்டால் போதும், ACTIVATE ஆகி விடும். ஒருவேளை PIN NUMBER இல்லாமல் இருந்தால், உங்களிடமிருந்த புதிய ATM CARD-ஐ எப்படி ACTIVATE செய்வதென்பதை இப்போது பார்க்கலாம்!!!

1. முதலில் ATM இயந்திரத்தில் உங்கள் புதிய ATM கார்டை எப்போதும் போல INSERT செய்யவும். PIN GENERATE என வரும், அதைத் தேர்வு செய்யவும்.

2. ACCOUNT NUMBER கேட்கும். அதையும் பதிவு செய்யவும்.

3. PHONE NUMBER கேட்கும். ஏற்கனவே நீங்கள் வங்கிக்கணக்கில் பதிவு செய்த REGISTERED PHONE NUMBER. அதை பதிவு செய்யவும். பின்பு CONFIRM என்ற பட்டனை அழுத்தவும்.

4. உங்கள் போனுக்கு ஒரு OTP NUMBER வரும்.

5. மீன்டும் ATM CARD-ஐ மெஷினில் INSERT செய்யவும். வழக்கம் போல் ENGLISH அல்லது தமிழ் மொழி தேர்வு செய்யவும். பிறகு, PIN CHANGE OPTION-ஐத் தேர்வு செய்யவும். பின்பு உங்கள் மொபைலுக்கு வந்த 4 DIGIT OTP எண்ணை ஒரு முறை மட்டும் பதிவு செய்யவும்.

6. மீண்டும் PIN NUMBER கேட்கும். அப்போது நீங்கள் உங்களுக்குத் தேவையான நீங்கள் மட்டும் ரகசியமாக வைத்திருக்கக் கூடிய PIN NUMBER-ஐ பதிவு செய்யவும்.

7. RE-ENTER PIN NUMBER எனக் கேட்கும். மீண்டும் புதிய PIN NUMBER-ஐப் பதிவு செய்யவும்.

8. இப்போது உங்கள் புதிய ATM CARD ACTIVATE ஆகி விட்டது. 

குறிப்பு: உங்கள் புதிய கார்டை ATM-ல் INSERT செய்தவுடன் அதன் FULL PROCESS முடியாத போதும், பழைய கார்டு செயலிழந்து விடும். அதன் பிறகு புதிய கார்டை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். மறக்காமல் A/C NUMBER-ஐயும் பதிவு செய்த MOBILE NUMBER-ஐயும் உடன் கொண்டு செல்லவும்.

9. மேற்கூறிய தகவல்கள் வாயிலாக தங்களது புதிய ATM CARD-ஐ ACTIVATE செய்வதில் சிரமம் இருந்தால், நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களோ, அந்த வங்கியின் கிளையுடன் சேர்ந்து இருக்கும் ATM இயந்திரத்தில் முயற்சிக்கலாம். ஏன் என்றால் உங்கள் புதிய ATM CARD ஐ ACTIVATE செய்வதில் சிரமம் இருந்தால் உடனடியாக உங்களது வங்கியின் அலுவலரை தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை சரி செய்து கொள்ள முடியும்.  

Share This Story

You Might Also Like These
Related Stories
Top