ஜோதிடம் எந்த அளவுக்கு உண்மையானது???
  • 13:55PM Nov 08,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:55PM Nov 08,2017 Chennai, Tamil Nadu 600003, India

ராசி, நட்சத்திரம், கிரக அமைப்பு, ஹோரை, ராகு, கேது, சுக்கிரன் இப்படி எப்பொழுது ஜோசியம் பார்க்கும் போதும் நாம் கேட்டிருக்கக் கூடும்.  ஆர்வம் காரணமாக எல்லாரும் ஜோதிடம் பார்ப்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பழக்கமாகவே மாற்றியிருக்கிறார்கள்.  உண்மையிலேயே கிரகங்களுக்கு நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தி இருக்கிறதா??? அப்படி இருக்கிறதென்றால் எந்த வகையில்??? காலையில் தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் இராசி பலன்கள் எல்லா நாளும் பலிப்பதாகத் தோன்றவில்லையே என்ற கேள்வி உங்களுக்குள் இருந்தால், மேலே படியுங்கள். ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு – அவர்களுக்கு ஆர்வம் அதிகம் என்பதால் அவர்களும் படித்து விடுவார்கள்.

ஏன் நடக்கவில்லை என்று எந்த ஜோதிடரிடமாவது கேட்டால், அந்த இராசியின் அப்போதைய இருப்பு, தசாபுத்தி என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். தெரிந்தவர் ஒருவர் ஜோதிட பைத்தியம்.  திடீரென்று புலால் உண்பதை நிறுத்தி விட்டார். கோட்டால் சனி-க்கு புலால், மது ஆகாது என்று தெரிவிக்க அப்பொழுதுதான் இவை எந்த அளவுக்கு உண்மை என்ற சிந்தனை எழுந்தது.

நவீன உபகரணங்கள் ஏதும் இல்லாத காலத்தில், கிரகங்களைப் பற்றிய அறிவு நமக்கு இருந்தது உண்மைதான்.  ஆனாலும், பூமியைச் சுற்றித்தான் அனைத்தும் சுற்றுவதாக ஜோதிடம் குறிப்பிடுவது நெருடல் என்றாலும் ஒரு வகையில் நம்மை வைத்துத்தான் மையத்தைக் கணக்கிட முடியும். கூடவே விதியை மதியால் வெல்ல முடியும் போன்ற கருத்துகள் வேறெதையோ குறிப்பிடுவது போலவும் தோன்றுகிறது.  ஒவ்வொரு மனிதனின் உடலமைப்பும் வேறு வேறானவை. ஆனாலும், பிறப்பு, வளர்ப்பு இவற்றையும் தாண்டி ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் ஒரு வித உருவ ஒற்றுமை இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் பிறந்த நேரம், நாள், நட்சத்திரம் இவை அவர்கள் உடலியலில் ஒரு வித இரசாயனக் கோட்பாடுகளைத் திணிக்கிறது என வைத்துக் கொள்வோம்.

இந்த இரசாயனக் கோட்பாடுகள்தான் அவனது உருவம், உயரம், எடை, விழியின் நிறம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது.  அந்த இரசாயனக் கோட்பாடுகளில் சுற்றி வரும் கிரகங்களின் புவி ஈர்ப்பு விசையால் ஏற்படும் மாறுதல்கள்தான் ஜோதிடம் என அறிவியல் பூர்வமாக சொல்லிவிட முடியும். அந்த நேரங்களில் அந்த உடல் நிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் அவன் உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன. அந்த உணர்வுகள் கொண்டு வரக்கூடிய விளைவுகள் மட்டும்தான் உண்மையான ஜோதிடம். உதாரணமாக சனி தசை அமையப் பெற்றவர் கோபத்தின் பிடியில் சிக்குவார். கோபம் தவறுகளுக்கு வழி வகுக்கும். அதனால் பாதிப்புகள் ஏற்படும். இப்படி ஒவ்வொரு தசைக்கும், ஒவ்வொரு இராசிக்கும் ஒவ்வொரு உணர்வு அதிகமாக ஏற்படும்.

பத்துப் பொருத்தங்கள் கூட உடல்நிலையில் அமையப் பெற்ற இரசாயணக் கோட்பாடுகளின் மூலம் நிர்ணயிக்க முடியும். அறிவியல் நிர்ணயித்தும் இருக்கிறது. அப்படியென்றால், ஜோதிடம் முழுதும் உண்மையென்று சொல்லிவிட முடியாது.  இந்த நிமிடம் பணம் வரும். இந்த நிமிடம் துன்பம் வரும் என இதுவரை யாரும் சொல்லியதே இல்லை.  ஜோதிடம் உங்கள் தசாபுத்தியை அறிந்து கொள்வதற்குத்தானே ஒழிய, அதிர்ஷ்டத்தை அறிந்து கொள்ள அல்ல.  மேலும், பரிகாரங்கள் மூலம் இவற்றை நிவர்த்தி செய்ய முடியாது. நம்மை உணர்ந்து கட்டுப்படுத்திக் கொள்ளும் போது, தசாபுத்தியின் குறைவை நாம் நிவர்த்தி செய்யப் பழகிக் கொள்கிறோம்.  இதைத்தான் விதியை மதியால் வெல்ல முடியும் என்று சொல்வார்கள். 

பரிகாரங்கள் என்பது அந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நபரை வேறு கவனத்திற்கு மாற்றுவதற்காக ஒழிய, வேறு காரணங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. கலர் கலராய் சட்டை போடச் சொல்வது கூட நிறங்களின் தன்மை சற்றே உணர்வுகளைச் சாந்தப்படுத்த உதவும் என்பது மட்டுமே.

சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கும் இது உண்மை என்றே புரியும். நன்றி!!!     

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top