Misc

சினிமாவில் பார்ப்பது பூராவும் பொய்யி! இராணுவத்தில் உண்மையாலுமே என்ன நடக்கும் தெரியுமா? இராணுவ இரகசியம் பாஸ்!

Oct 17 2020 12:29:14 PM

இவ்வளவு நாள் நாம் கற்பனையில் நினைத்துக்கொண்டிருந்த மாதிரி, எல்லா இராணுவ வீரர்களும் சினிமாவில் வருவது போல் இருக்கமாட்டார்கள். சினிமாவை பொறுத்தவரைக்கும் இராணுவ வீரன் என்றால், துப்பாக்கி ஏந்திக்கொண்டு காட்டிற்குள் செல்வது போலவும், விமானத்திலிருந்து குதித்து சாகசம் செய்வது போலவும், பெரிய மலை மீது கயிறு கட்டி ஏறுவது போலவும், முழுக்க முழுக்க ஒவ்வொரு காட்சிகளையும் மிகைப்படுத்தி காட்டியிருப்பார்கள். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கொடுக்கப்படும் பயிற்சி தான் அதுவென்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். 

military army india

திரையில் காட்டப்படாத பல இரகசியங்கள், இராணுவத்தில் பொதிந்து கிடக்கிறது. எதனையும் வெளிப்படையாக வெளியில் சொல்லிவிட முடியாது. அதில் விதிவிலக்காக உள்ளதை மட்டும் உங்களிடம் பகிர்கிறேன். உடலை எந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு  இராணுவத்தில் கடைசி வரைக்கும் பணியாற்ற முடியும். இராணுவ பணியில் இருப்பவர்களுக்கு கவாத்து பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி கட்டாயம் இருக்கும். நாள் தவறாது செய்ய வேண்டும்.

military army india

கவாத்து என்றால், உடலையும், மனதையும் பக்குவப்படுத்தும் பயிற்சிகளை குறிக்கும். விவசாயத்தில் கூட மரங்களையும், செடிகளையும் ஒழுங்கு படுத்தும் முறைகளுக்கு கவாத்து என்று பெயர். கவாத்து செய்த பிறகு, நல்ல விளைச்சல் கிடைக்கும். அது போல கவாத்து பயிற்சி மேற்கொள்ளும் இராணுவ வீரர்கள் மனதால் பக்குவப்பட்ட நிலையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால், கவாத்து பயிற்சி முக்கியமாகிறது. படத்தில் காட்டுவது போல, எந்த நேரமும் துப்பாக்கி ஏந்திக்கொண்டு பேரிடுவது மட்டுமே வேலை கிடையாது.

military army india

உடல் உழைப்பு சார்ந்த வேலைகளும் கொடுக்கப்படும். தங்கி இருக்கும் இடத்தை சுத்தம் செய்தல், புல் வெட்டுதல், ஏரியில் மண் வெட்டுதல், தோட்டங்களை பராமரித்தல் போன்ற வேலைகளும் இருக்கும். இதற்கு பெயர் "சரம்தான்" என்பதாகும். இராணுவ பணி குறித்து நாம் நினைப்பது ஒன்றாகவும், அங்கு நடப்பது வேறொன்றாகவும்  இருக்கும். எந்த சூழ்நிலையில் களமிறங்கினாலும் முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே, அடிமட்ட வேலையானாலும், அதனைச் செய்ய இராணுவ வீரர்கள் பணிக்கப்படுகின்றனர்.

military army india

ராணுவ வீரர்கள் எல்லை சண்டை, உ ள்நாட்டு கலவரம் போன்ற எந்த பிரச்சனையும் இல்லாத, சாதரண காலத்தில், எவ்வளவு அதிகமாக வியர்வை சிந்துகிறார்களோ, அவர்கள் அவ்வளவு குறைவாக போர்க்காலத்தில் இரத்தம் சிந்துவார்கள்" என்பதுதான் இராணுவ பணியின் தாரக மந்திரமாம். இராணுவ நண்பரின் அனுபவத்தை கேட்டு தெரிந்து கொண்டதை வைத்து சிலவற்றை கூறியுள்ளேன். இது போன்ற வேறு சில சுவாரஸ்ய தகவல் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் பதிவிடலாம்.