Misc

இந்த மாதிரி பசங்களை பார்த்தால் பெண்கள் கோவில் கட்டி கும்பிடுவார்களாம்!

Jun 24 2021 04:14:00 PM

பெண்கள் என்றாலே ஆண்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும், நாள் முழுவதும் வீட்டு வேலைகள்  செய்துவிட்டு இரவில் ஆணின் விருப்பப்படி நடந்துகொள்ள வேண்டும், மொத்தத்தில் பெண்கள் ஆணின் முழு அடிமையாக வாழ வேண்டும் என்று ஏட்டில் எழுதாத விதி இருக்கிறது. இந்த மாதிரி பெண்களை வேலை வாங்கும் ஆண்களைக் கண்டால் பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்.

how girls believe boys

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் டோனி தனது மனைவி சாக்க்ஷி உடன் மால் ஒன்றிற்கு சென்றிருப்பார். அப்போது அவருடைய மனைவியின் ஷூ லேஸ் கழன்று விடும். உடனே டோனி அவருடைய மனைவியின் காலில் உள்ள ஷூ லேஸை சரிசெய்துவிடுவார். தான் எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்த போதிலும் தன் மனைவிக்கு ஒரு உதவி என்றவுடன் டோனி உடனே செய்வார். இப்படி நடந்து கொள்ளும் ஆண்களை சிலர் தவறாகப் பேசுவார்கள். இவன் ஒரு பொம்பள சட்டி என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் இதுபோன்று பெண்களின் மீது அக்கறையாக இருக்கும் ஆண்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.

how girls believe boys

தன் தாய்க்கு ஒரு உதவி என்றவுடன் செல்லும் பையன், தன்னுடைய தங்கைக்காக மெடிக்கல் ஷாப்பில் stayfree வாங்கும் ஆண்கள், மனைவிக்கு உடல்நிலை முடியாதபோது அவருக்கு உதவியாக இருக்கும் ஆண்கள் இவர்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் மனதளவில் அதிக முதிர்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள். தன்னைப்பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். தன் தாய், தங்கை, மனைவி அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது உதவ வேண்டும் என்று மட்டுமே இந்த வகை ஆண்கள் நினைப்பார்கள். இது போன்ற ஆண்கள் கிடைத்தால் பெண்கள் கோவில் கட்டி கும்பிடுவார்கள்.

how girls believe boys