குழந்தைகள் எத்தனை சீக்கிரம் ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளும் தெரியுமா?
  • 07:52AM Nov 28,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:52AM Nov 28,2017 Chennai, Tamil Nadu 600003, India

என்றாவது யோசித்திருக்கின்றீர்களா, உங்கள் குழந்தை எப்படி மொழியைக் கற்றுக் கொள்கிறது என்று??? அது இயல்பாக வருவது போலத் தோன்றினாலும் பின்னால் உள்ள விஞ்ஞானம் மிகவும் வியப்பூட்டும் என்பது நிதர்சனம்.  பொதுவாக, குழந்தைகள் கருவில் இருக்கும் போதே அவற்றுக்கு கேட்கத் துவங்கி விடும்.  இருந்தாலும் வெறும் குரலாக மட்டும் கேட்பதால், அதனை அதனால் முழுமையாகப் பிராசஸ் செய்ய இயலாது.  பிறந்த நில நாட்களுக்குப் பிறகு பார்வை நிலை கொள்ளும் போதுதான் அந்தக் குழந்தை இந்தக் குரலுக்கு இந்த முகம் என வகைப்படுத்தக் கற்றுக் கொள்கிறது, ஆனால், மொழி ஆற்றல்.  அது கேட்கத் துவங்கிய கணத்திலிருந்தே துவங்கி விடுகிறது. ஆனால் எப்படி?

ஒரு எளிய உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்.  நாம் ஒரு புது ஊருக்குப் போகிறோம்.  அந்த ஊர் பாஷை நமக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது.  அங்கே போன இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, பாஷை தெரியாவிட்டாலும் நம்மைப் பற்றி நல்லது பேசுகிறார்களா, கெட்டது பேசுகிறார்களா என்பது நமக்குப் புரியும்.  ஒரு மாதம் கழித்து ஏறத்தாழ கேட்டுக் கேட்டே நாம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்போம்.  6 மாதங்களில் சரியான முறையில் முயற்சி செய்தால் அவர்களைப் போலவே நம்மால் பேசவும் முடியும்.  இதற்குக் காரணம் Constructural Relativity எனப்படும் இயல்பு ஆகும்.  இது முகத்தின் பாவங்களை வைத்து முதலில் பேசுவதை அர்த்தம் கண்டு கொள்ள முயற்சிக்கும்.  பின்னர் அர்த்தம் தெரியத் தெரிய, தெரிந்த மொழியினை, அதன் இலக்கணத்தைத் தொடர்பு படுத்தி ஒப்பிட்டுப் பார்க்கும். இதன் மூலமாகவே நாம் அந்தப் பாஷையை விரைவில் கற்றுக் கொள்கிறோம்,

குழந்தைகளும் அப்படித்தான்.  என்ன ஒரே வித்தியாசமென்றால், அவற்றின் இந்தக் Constructural Relativity நம்மை விடப் பலமடங்கு அதிகம்.  லூசி என்ற படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா??? அதில் சொல்லப்படும் CPH4 என்ற இரசாயனம் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்தக் கற்பிக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.  இதன்படி குழந்தை தனது மூன்றரை வயதுக்குள் தான் கேட்கும் அத்தனை பாஷைகளையும் பழகிக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கிறது, பிறப்பிலேயே.  என்ன ஒன்று அதனைக் குழந்தை காதில் படுமாறு விடாமல் பேசிக் கொண்டேயிருக்க வேண்டும், அவ்வளவுதான். 

பெற்றோர் இருவரும் வேறு மொழிக்காரர்களாக இருக்கும் பட்சத்தில், அவரவர் தாய்மொழியிலேயே குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாலே போதும் அதனைக் கற்றுக் கொள்வதற்கு.  நிறைய மாநிலங்களில் இந்த வயது வரை குழந்தைகளை வேற்று மொழிக்காரர்களிடம் ஒப்படைக்கக் கூட மாட்டார்கள்.  உங்கள் குழந்தையின் ஆங்கிலப் புலமை, மொழிப் புலமை இவற்றை வளர்க்க வேண்டுமானால் இந்தப் பருவத்திலேயே அதனிடம் இதில் பேச வேண்டும். என்ன ஒன்று அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை இந்த வயதில் அது கற்றுக் கொள்ளும் அனைத்துமே தாய்மொழிதான் அதற்கு.  அந்த அளவுக்கு ஆழமான புரிதல் அந்த வயதிலேயே குழந்தைக்கு ஏற்பட்டுவிடும்.

உங்கள் குழந்தை எதைப் படிக்க வேண்டும் என்பதை நீங்கள் எந்த வயதிலிருந்து தீர்மானிக்கலாம் என்பது இதன் மூலம் பெற்றோர்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனினும், தாய்மொழிக்கு என்று கண்டிப்பாகப் பெற்றோர் சற்று மதிப்பளிக்க வேண்டும்.  வழி, வழியாக இருக்கும் மொழி, ஜீன் பதிவுகளின் மீது கற்றுக் கொள்ளும் மொழி என்பதால் அதன் வழியாகப் படிக்கும் போது ஏற்படும் புரிந்து கொள்ளுதல் வேறு எதை விடவும் சிறப்பாக இருக்கும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top