#thalaajith: இதை விட அழகாக காதலை கூற முடியுமா? ஷாலினிக்கு வித்தியாசமான ப்ரோபோசலை கொடுத்த அஜித்! இப்படியெல்லாம் இம்ப்ரெஸ் செய்துள்ளாரா!
  • 11:15AM Oct 05,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 11:15AM Oct 05,2019 Chennai

பைக் ரேசிங், கார் பந்தயம், ஏரோ மாடலிங், சிறந்த சமையல் கலைஞர், புகைப்பட கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் அஜித்குமார்.தமிழ் திரையுலகில் நல்ல நடிகர் என்பதை காட்டிலும் நல்ல மனிதர் என்ற பெயராலே அடையாளப்படுத்தும் நடிகராக உள்ளார். மேலும்  “மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி” கல்லூரியில் “HELICOPTER TEST PILOT AND UAV SYSTEM ADVISER” எனும் பொறுப்பில் பணியாற்றிவருகிறார்.குறிப்பிட்ட துறையில் பட்டயப்படிப்பு இல்லாவிடினும்,அதில் சாதிக்க  ஆர்வமே போதுமானது என்பதை நிரூபித்த பெருமை அஜித்குமாருக்கு உண்டு.  மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வரும்போது ஒரு  VISIT திற்கு ஆயிரம் ரூபாயை மட்டும் ஊதியமாக பெறுவது இவரது ரசிகர்கள் மத்தியில் அஜித்தை உச்சத்திற்கு கொண்டு சேர்த்த விஷயம்.இப்படி பொது வாழ்க்கையில் பிசியாக இருக்கும் தல,சொந்த வாழ்க்கையிலும் மிகவும் பொறுப்பானவர் என்பது அவரது குழந்தைகளின் பள்ளி விழாக்களில் கலந்து கொண்டதன் வாயிலாக அறிய முடிகிறது.  

இவருக்கு சினிமா வாழ்க்கையில் மட்டுமின்றி  குடும்ப வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் அமர்க்களம். அ‌ஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் இணைத்து நடித்து சூப்பர் ஹிட்டான படம் அமர்க்களம். 

இந்த படத்தில் நடிக்கும் போதே இவர்களுக்குள்  இடையே காதல் கிசுகிசுக்கப்பட்டது. அந்த காதல் திருமணத்தில் முடிந்து, தற்போது அ‌ஜித் மற்றும் ஷாலினி சிறந்த திருமண தம்பதிகளாக மற்றவர்களுக்கு முன் உதாரணமாக உள்ளனர். இவர்களுக்குள் இருந்த இந்த காதலை முதலில் கூறியவர் அஜித்தா ? ஷாலினியா? இருவருக்குள் காதல் எப்படி மலர்ந்தது? என்ற சீக்ரெட்டை உடைத்துள்ளார் அப்படத்தின் இயக்குனர்.

அஜித் அமர்க்களம் பட ஷூட்டிங்கின் போது இயக்குனரிடம் தன்னுடைய மொத்த கால் ஷீட்டையும் கொடுத்து விடுகிறேன்.விரைவாக இந்த படத்தை முடித்து விடுங்கள் என கூறியுள்ளார்,ஏன் இப்படி கூறுகிறார் என யோசித்த இயக்குனருக்கு காத்திருந்தது  வியப்பு கலந்த இன்ப அதிர்ச்சி,   நீங்க விரைவில் படத்தை முடிங்க இல்லையெனில்  ஷாலினி மீது விரைவில் காதல் கொண்டு விடுவேன் என பயமாக இருக்கிறது என  கூறினாராம். இது போன்று அழகாக காதலை கூறினால்  யார் தான் வேண்டாம் என சொல்ல போகிறார்கள்?   இதனையறிந்த  ஷாலினி அவரது காதலை  ஏற்று கொண்டார் என்று தெரிவித்து உள்ளார் இயக்குனர். 
  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top