ஆணவக்கொலை - ஓசூர் சேர்ந்த காதல் ஜோடிகளை ஆற்றில் தள்ளி கொலை !!
  • 11:05AM Nov 16,2018 Hosur, Tamil Nadu, India
  • Written By AR
  • Written By AR
  • 11:05AM Nov 16,2018 Hosur, Tamil Nadu, India

ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நந்தீஸ் என்ற இளைஞன் ஓசூரில் உள்ள ஒரு கடையில் பணி புரிந்து வந்துள்ளார். அதேபோல் கிரிஷ்ணகிரியை சேர்ந்த சுவாதி. இருவரும் ஒன்றரை ஆண்டுக்கு முன் சந்தித்து பழக்கத்தில் காதலித்து வந்தனர்.

mady lover .jpgகாதலித்து வந்த சில நாட்களில் நந்திஸ் தனது பெற்றோர்களிடம் சுவாதியை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு அவர் தந்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து சுவாதியின் பெற்றோரிடம் பேசியுள்ளார் நந்திஸ் பெற்றோர். பின்பு சுவாதியின் தந்தை நந்திஸ் பற்றி விசாரித்ததில் அவர் கீழ் ஜாதியை சேர்ந்தவர் என்று அறிந்து கொண்டு திருமணத்திற்கு ஒற்றுக்கொள்ளவில்லை. அன்று முதல் சுவாதியை வீட்டை விட்டு வெளியே அனுப்பவில்லை. பின்பு ஒரு நாள் காலேஜ் மாற்று சான்றிதல் வாங்கி வருவதாக கூறி சென்று சுவாதி மற்றும் நந்திஸ் இருவரும் சந்தித்து திருமணம் செய்து ஓசூரில் தனி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

Image result for sivasamudramஇருவீட்டாரும் தங்கள் பிள்ளைகள் இவ்வாறு செய்ததை எண்ணி கவலை கொண்டுள்ளனர். இந்நிலையில் ஓசூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இந்த ஜோடியை பார்த்த சுவாதியின் உறவினர் ஒருவர். உடனே சுவாதியின் மாமா அஸ்வத்திடம் தகவல் கூறியுள்ளார். அதேபோல் சுவாதியை தேடி கொண்டிருந்த சொந்தகாரர்கள் இரண்டு பேரையும் அழைத்து வந்த அஸ்வத் சுவாதி மற்றும் நந்திஸிடம் ஜாதியை வைத்து பிரச்சனை செய்துள்ளனர். பின்பு கூட வந்த ஸ்ரீநிவாஸ் என்பவர் காவல் துறையிடம் பேசலாம் என்று அவர்களை காரில் கர்நாடக சிவசமுத்திரம் அருவி பக்கம் அழைத்து சென்று இருவரையும் கை கால்களை கட்டி வைத்து அடித்து ஆற்றில் தள்ளி விட்டனர். இருவரும் தண்ணிரில் இறந்து விட்டனர். இருவரது உடலும் இன்று காலை கிடைத்த பின்பு விசாரித்து சுவாதியின் உறவினர் நான்கு போரையும் கைது செய்துள்ளனர்.  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top