Misc

ஹோட்டல் கடைகளை விட மாலை நேர தள்ளுவண்டி கடைகளில் கூட்டம் கூட என்ன காரணம்? இந்த ரகசியம் தெரிந்தால் பெரிய கடைகள் பக்கம் போகவே மாட்டிங்க!

Apr 29 2021 11:58:00 AM

எங்க ஊரில் நிறைய ஹோட்டல், சாப்பாடு மெஸ் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் பகல் முழுவதும் கூடும் கூட்டத்தை விட மாலை நேரங்களில் பானிபூரி கடைகளிலும், தள்ளுவண்டி கடைகளிலும் நிறைய கூட்டத்தைப் பார்க்க முடியும். நாங்க எப்பவுமே பெரிய ஹோட்டல் கடைகளில் தான் உணவு வாங்கி சாப்பிடுவோம். சரி அந்த தள்ளுவண்டி கடைகளில் அப்படி என்னதான் ஸ்பெஷல் என்று பார்க்கலாம் என சென்றிருந்தேன்.

hotel thallu vandi shop

மாலை நேரங்களில் அங்கே பரோட்டா, இட்லி, தோசை இவை தான் அங்கு ஸ்பெஷல். சரி ஒரு 4 பரோட்டா வாங்கலாம் என்று சென்றிருந்தேன். எப்போதுமே அங்கு கூட்டமாக இருப்பதால் பார்சல் சொன்னால் வாங்குவது கொஞ்சம் க ஷ்டம். அரை மணி நேரம் காக்க வைத்துவிட்டார்கள். அந்த அரைமணி நேரத்தில் நூற்றுக்கணக்கான பேர் வந்து சாப்பிட்டுவிட்டு சென்றார்கள்.

hotel thallu vandi shop

வெறும் விலை குறைவு அதனால் தான் அங்கே கூட்டம் அள்ளுகிறது என்று நாம் நினைப்பதுதான் பெரிய த வறு. பெரிய கோடீஸ்வரர்களே அங்கே வந்து காரை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் சாப்பிட்டு செல்கிறார்கள். இட்லிக்கு மூன்று வகை சட்னி, சாம்பார் கொடுக்கிறார்கள். பரோட்டா, தோசை என அனைத்தும் நம் கண்முன்னே தயாரித்து கொடுக்கிறார்கள். அதற்கு கொடுக்கப்படும் சட்னிக்களின் சுவையும் பிரமாதமாக உள்ளது.

hotel thallu vandi shop

நீங்க எவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு சென்றாலும் அங்கே கொடுக்கும் பரோட்டா அப்போதுதான் தயாரித்ததா என்று உங்களால் சொல்ல முடியாது. இந்த நம்பிக்கை தன்மைக்காகவே நிறைய மக்கள் சாலை ஓர தள்ளுவண்டி கடைகளில் விரும்பி சாப்பிடுகிறார்கள். பெரிய கடைகளில் நீங்கள் ஒருவர் சாப்பிடும் பில்லுக்கு இந்த கடைகளில் உங்கள் குடும்பமே வயிறார சாப்பிடலாம். தரமான உணவு எங்கு கிடைத்தாலும் நீங்கள் வெறும் அந்த இடத்தை மட்டும் பார்க்காமல் உங்கள் பட்ஜெட்டையும், சுவையையும் பார்த்தால் வயிறார நல்ல உணவு சாப்பிடலாம்.

hotel thallu vandi shop