Highrise

உங்க தைரியத்தை வச்சி பணம் சம்பாதிக்க நினைக்கிறீங்களா? தில் இருந்தா இந்த போட்டியில கலந்துக்கிட்டு ஜெயித்து காட்டுங்கடா பார்க்கலாம்!

Sep 22 2021 05:44:00 PM

வித்தியாசமான போட்டிகளை வைப்பதில் அமெரிக்காவை யாராலும் அடிச்சுக்க முடியாது. காமெடி, திகில், உணவு, குழந்தைகள் நிகழ்ச்சி என எந்த விதமான போட்டியாக இருந்தாலும் அதை வெற்றிகரமாக நடத்துவாங்க. இப்போது திகில் படங்களை பார்க்கவேண்டும் என்று ஒரு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூ வேல் கேம் டாஸ்க் மாதிரி தான். ஆனா அதுல வரமாதிரி தற்கொலை எல்லாம் செய்ய வேண்டியதில்லை.

horror-movies-contest USA

அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் திகில் படங்கள் மக்கள் மனதில் ஏற்படுத்தும் பயம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இந்த போட்டியை அறிவித்துள்ளது. அதன் படி நீங்க பெரிய தைரியசாலி என்று நிரூபிக்க வேண்டுமானால் 10 நாட்களில் படு ப யங்கரமான 13 படங்களை பார்க்க வேண்டும்.

horror-movies-contest USA

இந்த லிஸ்டுல இருக்குற படங்கள் என்னவென்று தெரியுமா? Quiet Place, Sinister, Saw, Annabelle என்று உங்களை புரட்டிப்போட்ட பல திகில் திரைப்படங்கள் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது. ஆனா இத உங்கள சும்மா கெத்து காட்டுறதுக்காக செய்ய சொல்லல. 10 நாட்களில் இவுங்க சொல்லும் படங்களை பார்த்துமுடித்து விட்டால் உங்களுக்கு 1300 டாலர் பரிசு தருவாங்க.

horror-movies-contest USA

படத்தை பார்க்கும்போது உங்க இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும். நீங்க பயப்படாம இருந்தால் உங்களுக்கு பரிசு நிச்சயம் உண்டு. இதுல இருக்குற ஒரே சிக்கல் என்னெவென்றால் இதுல நீங்க கலந்துகொள்ள சில நிபந்தனைகள் இருக்கு. பெருசா ஒன்னும் இல்ல. நீங்க 18 வயசுக்கு மேற்பட்ட நபராக இருப்பது அவசியம். மற்றொரு நிபந்தனை நீங்க அமெரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

horror-movies-contest USA

எங்களுக்கு இதுல உப்பும் இல்ல. ஊறுகாயும் இல்ல. அப்புறம் எதுக்குடா இதைப்பத்தி சொல்லுற என்று என்னைப்பத்தி மனசுக்குள்ள திட்டிக்கொண்டு இருப்பீங்களே. அட உங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்றால் விட்டுத்தள்ளுங்க. அமெரிக்காவுல வசிக்கிற உங்க நண்பன், மாமா, சித்தப்பா, அண்ணன் இப்படி யாருகிட்டயாவது சொல்லுங்க. அவுங்களால முடிஞ்சா இதுல கலந்துகொள்ளட்டும்.