#horror: இப்படியொரு அமானுஷிய அனுபவமா? ஜாமத்தில் கடந்த ஒவ்வொரு நிமிடமும்! அறிவியல் ரீதியாக விளக்கமுடியாத மர்மம்!
  • 17:02PM Oct 08,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 17:02PM Oct 08,2019 Chennai

1983இல் ஒரு புதுமணத் தம்பதிகள் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைப்புக்காக சென்றுவிட்டு,  தங்கள் ஊரான மன்னார்குடிக்கு திரும்புகையில் இரவு 10 மணி இருக்கும்.உறவினர்கள் இங்கேயே தங்குங்கள் போக வேண்டாம் என சொல்ல சொல்ல வண்டி இருக்கும் நம்பிக்கையில், அவர்கள் இருவரும் ஊருக்கு கிளம்புகிறார்கள். 35 ஆண்டுகளுக்கு முன்பு துவாக்குடிக்கு அப்புறம் செங்கிப்பட்டிவரை  வழிநெடுக பொட்டல்காடாகத்தான் இருக்கும். இவர்கள் வந்த புல்லட் மோட்டார் சைக்கிள் பழுதுபட்டு திடீரென நின்றுபோயிற்று. எங்கும் கும்மிருட்டுஅப்போது  மணி இரவு 11 இருக்கும். மனைவியை தைரியப்படுத்திவிட்டு கணவன் மனைவி இவர்களிருவரும் நடக்க தொடங்குகிறார்கள். தூரத்தில் சாலையிலிருந்து  சிறு வெளிச்சம் கண்ணில் படுகிறது. ஏதாவது கடை அல்லது வீட்டு வெளிச்சம் போல இருக்கும் என இருவரும் அதனை நோக்கி வண்டியை தள்ளிக்கொண்டே நடக்கிறார்கள்.  

ஏதோ சிற்றூருக்கு செல்லும் ஒருபிரிவு தென்பட்டது. சற்று கொஞ்சம் தூரம் நடக்க அப்போது அவர்கள் பார்த்த விளக்கின் ஒளியை கண்டுவிட்டனர். அது   ஒரு சின்ன பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட விளக்கின் வெளிச்சம்.  கோவிலை இவர்கள் நெருங்கியதும் இவர்களை  ஒரு வெள்ளை உருவம் நெருங்கியது. அந்த நேரத்தில் என்னவெல்லாம் எண்ணம் எழும் என்பது சொல்ல வேண்டுமா ?

சுமார் 50 வயது மதிக்கத்தக்க மனிதர், காடா பனியன், நாலுமுழ வேட்டி அணிந்து கோவிலில் அமர்ந்திருந்தார். அவர் இவர்களுடன் பேச ஆரம்பித்த போது பயமெல்லாம் காணாமல் போனது. அவரோ! நீங்க புது சோடியா ? என்னயா இது புள்ளைய கூட்டிட்டு நடுராத்திரியில வந்துருக்க அக்கறையுடன் கூறிவிட்டு,நீ சித்த இரு நா போய் ஊருக்குள்ள பாக்குறேன்.வண்டி சரி செய்றவுக இருந்த கூட்டியாரனு கிளம்புகிறார்.போனவர் விடிந்தும் வரல, விடிந்து கூட்டமா விவசாயிங்க வரப்புக்கு வந்துகொண்டிருக்க, இந்த தம்பதிகள்  இங்க உட்கார்ந்து கொண்டு இருப்பதை பார்த்துட்டு அதிர்ச்சியாகி தங்களுக்குள்ளே ஏதோ பேசிட்டு இருக்காங்க! அப்புறம் இந்த தம்பதிங்க நடந்த விபரத்தை அவர்களிடம் கூறவே, அவர்களுக்கு இன்னும் அதிர்ச்சி கூடிக்கொண்டே போகிறது.

இரவு நடந்ததையெல்லாம் கேட்ட ஒருவர் பயம் கலந்த வியப்புடன், பிள்ளையாரப்பா!  ராத்திரி சிவஞானத்தப்பா அண்ணன் குரல் மாதிரி கேட்டுச்சு! தம்பி கொஞ்சம் வெளியே வாடா! யாரோ பட்டணத்துப் புள்ளைக போல இருக்கு புது சோடியா இருக்காக!  வண்டி கெட்டுப்போய் நடுரோட்டுல தவிக்கிறாங்க, சரி பண்ணனும்! அப்படின்னு கூப்பிட்டமாதிரி இருந்துச்சு.உடனே  நான் பயந்துபோய் முருகன் விபூதியைப் பூசிக்கிட்டு படுத்துட்டேன் என கூறுகிறார்.அந்த தம்பதிகளுக்கு என்ன இவர்களுக்குள்ளே பேசிக்கிறாங்க என்ற குழப்பம் ஒருபக்கம். விசாரிக்காவே ஊர்மக்கள்,   சிவஞானத்தப்பா  குடும்பத் தகராறில் 10  வருஷத்துக்கு முன் விஷமருந்திய போது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கையில் அந்தப் பிள்ளையார் கோவிலருகே அவரது உயிர் பிரிந்தது. அதன் பிறகு இரவு நேரங்களில் அவர்  சிலர் கண்களில்  வெள்ளை உருவமாகத் தென்பட்டிருக்கிறார். இதுவரை அவர் யாரையும் எதுவும் செய்ததில்லை இருந்தாலும்  ஊர்மக்கள் இரவு நடமாட்டத்தை நிறுத்திக்கொண்டுவிட்டார்கள்.அந்தக் கோவிலில் இந்த தம்பதிகள்  இரவு முழுதும் தங்கியிருந்தது தான் விவசாயிகளுக்கு வியப்பு. பற்றாக்குறைக்கு சிவஞானத்தப்பா இவர்களுக்காக  மெக்கானிக் அழைக்கவேறு போயிருக்கிறார்.இறந்தும் உதவும் எண்ணமா?

 ஊருக்குள் இருந்து மெக்கானிக்கை கூட்டிவர., அவரது ஒரு உதையிலே வண்டி ஸ்டார்ட் ஆனது.ஆனால் இரவு 200 முறை உதைத்தும் வண்டி அசைந்த பாடில்லை என்ற விறுவிறுப்பான பயம் கலந்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் திரு.ராஜா எனும் நண்பர் ஒருவர். மனித அறிவை மீறிய சில நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன என்பதனை ஒரு சில நேரங்களில் நம்பத்தான் வேண்டியுள்ளது,அந்த அனுபவத்தை நாம் பெறும்போது....   

   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top