Rainforest

என்னது இவ்ளோ விலையா ? இதை மட்டும் செஞ்சு பாருங்க அப்புறம் அம்பானிக்கே நீங்கள் சவால் விட முடியும்

Apr 03 2021 08:42:00 AM

உலகில் எத்தனையோ விதமான காய்கறிகள் இருக்கிறது. நம் பெரிதும் கேள்விப்படாத ஹாப் ஹுட்ஸ் என்ற காய்கறி வகை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலை மதிப்பு மிக்கதாக இருக்கிறது. இந்த காய் ஒரு கிலோ 85000 ரூபாய் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ?

hop-hoots-vegetable

பீகாரில் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி இந்த அற்புதமான தாவரத்தை பயிரிட்டு வளர்த்து வருகிறார். 38 வயதான அம்ரேஷ் சிங் என்ற அந்த விவசாயி சுமார் 2.5 லட்சம் செலவு செய்து இதை பயிரிட்டுள்ளார். சர்வதேச சந்தையில் மிக நல்ல விலைக்கு விற்பனையாகும் இந்த காயை தனது நிலம் முழுவதும் வளரச்செய்து வருமானம் ஈட்டுகிறார் இவர்.

hop-hoots-vegetable

இந்த தாவரத்தின் பூக்கள் பீர் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இலைகள் மற்றும் காய்கள் உணவுக்கும் மருத்துவ தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு சந்தை விற்பனையில் முக்கிய இடத்தில் இருக்கும் ஹாப் ஹுட்ஸ் காய்கறியை விவசாயிகள் அனைவரும் பயிர் செய்து வந்தால் விரைவில் எல்லோரும் பணக்காரர்கள் ஆக முடியும் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் அம்ரேஷ் சிங்.