Misc

ஆளு தான் சிறுசு! ஆனா இத மிஞ்ச யாராலயும் முடியாது, அப்படி ஒரு திறமையிருக்கு

Apr 05 2021 10:25:00 AM

உலகிலேயே மிகவும் சிறிய பறவை என்று கூறப்படுவது தேன்சிட்டு ஆகும். மொத்தம் 132 வகை இந்த இனத்தில் இருக்கிறது. பார்ப்பதற்கு குட்டியாக இருக்கும் இந்த பறவை சிட்டுக்குருவியை விட அளவில் சிறியது. மலர்களில் உள்ள தேனை உணவாக உட்கொள்ளும்.

honey-bird

ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஆசியா பகுதிகளில் இந்த பறவை வாழ்கிறது. இந்த பறவையின் அலகு நீண்டு வளைந்து காணப்படும். ஆண் பறவை மின்னும் வண்ணங்களில் தோற்றமளிக்கும். பெண் பறவை சற்று பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த பறவையின் கூடு பார்ப்பதற்கு மணிபர்ஸ் போல இருக்கும். ஒரு சமயத்தில் அதிகபட்சம் மூன்று முட்டையிடும்.

honey-bird

மூன்று வாரங்கள் முட்டையை அடைகாக்கும். பெண் பறவையை விட ஆண் பறவையின் வால் சற்று நீளமாக இருக்கும். இந்த பறவையின் ஆயுட்காலம் சராசரியாக ஐந்து ஆண்டுகள். ஒரு நொடிக்கு 80 முறை தன்னுடைய இறக்கைகளை இந்த பறவை அசைக்கும்.மணிக்கு 27 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் இந்த பறவை இடம்பெயரும் காலம் வந்தால் 2000 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து செல்லும்.