வீட்டு அட்ரஸா குறிச்சுக்கோங்க - CH2412
  • 14:13PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:13PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India

       ஹலோ, ஹலோ, இருங்க… போகிற போக்கப் பார்த்தா இனி அப்படித்தான் ஆயிடும் போல இருக்கு.  நம்ம மோடிஜி செம்மையா யோசிச்சு, அடுத்த ரவுண்டுக்கு புதுசா ஒரு அறிவிப்பை வெளியிடலாம்னு கேள்விப்பட்டேன்.  அதான் என்ன விஷயம்னு விசாரிச்சா, கொஞ்சம் கேராத்தான் இருக்கு.  கூடிய சீக்கிரம் எல்லா வீட்டு அட்ரஸையும் 6 இலக்க நம்பரா மாத்தப் போறாங்களாமா… மனுஷங்களுக்கு ஆதார் மாதிரி, வீடு, ஆபீசுக்கெல்லாம் புதுசா டிஜிட்டல் டேக் குடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்களாமா…

       அதென்னங்க, டிஜிட்டெல் டேக்.  ரொம்பப் பெரிசா இருக்கிற அட்ரஸை ஊரு, ஸ்டேட், தெரு இதையெல்லாம் வச்சு 6 இலக்க ஆல்பா நியூமெரிக் (ஆங்கில வார்த்தை, எண்களுடன்) நம்பரா மாத்திக் குடுக்கப் போறாங்களாமா!!!  இதுக்கு கூட வேலை செய்யறது நம்ம தபால் மற்றும் தகவல் தொடர்புத் துறைதானுங்க… சரி, அப்படிப் பண்ணி என்ன சாதிக்கப் போறாங்களாமான்னு கேட்டதுக்கு,  சொத்தோட விபரம், உரிமையாளர், சொத்து வரி அறிக்கை, தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பின் விவரங்கள்னு எல்லாத்தையும் ஒரே இடத்துல வச்சி கண்காணிக்க முடியும்.  தேவைக்கதிகமான சொத்தோ, பினாமி சொத்தோ இருந்தா டக்னு கண்டுபிடிச்சிருவாங்களாமா…

சோதனைக்காக டெல்லி, நொய்டால ரெண்டு பின்கோடுகளை மட்டும் இப்படி மாத்தி, நல்லது கெட்டதைப் பார்த்துட்டு அப்புறம் நாடு பூரா கொண்டு வரப் போறாங்களாமா… என்ன ஒரு சௌரியம்னா, இனி விசிட்டிங் கார்டை நீட்டமா அடிச்சுக்கலாம்.  பேரு, ஒரு 6 நம்பர், அப்புறம் போன் நம்பர் போதுமில்லை.  உங்க இடம், அதுக்கான ஜிபிஎஸ் கோஆர்டினேட்ஸ்னு எல்லாத்தையும் இது வச்சிருக்குமாம்.  உங்க வீட்டுக்கு வரனும்னா 6 இலக்க நம்பரைப் போட்டாப் போதும், உடனே வழி காமிச்சிருமாமா… எதுக்கு இவ்ளோ ரிஸ்க்னா வழக்கமா சொல்றா மாதிரி, வீடு, ஆபீசெல்லாம் கண்டுபிடிக்கக் கஷ்டமாயிருக்குன்னு எளிமைப்படுத்தறாங்களாமா…

கேட்கிறதுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு… கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு மேலா இன்னும் நடந்து முடியாம இருக்கிற ஒரு விஷயத்தைப் பத்தி சோல்லட்டுமா… அது வந்துங்க, எல்லாப் பட்டாவையும் கணினில பதிவு செய்யறது மூலமா, பினாமி சொத்துக்களை ஒழிக்க முடியும்னு காங்கிரஸ், காங்கிரஸ்னு ஒரு கட்சி ஒரு திட்டம் கொண்டு வந்துச்சு.  இன்னைக்கு அதோட உச்சபட்ச சாதனையே இந்தியால சிட்டி வரைக்கும் ஆன்லைன்ல பட்டா யாரு பேருல இருக்கிறதுன்னு பார்க்கிறதுதான். பத்து வருஷமாகப் போவுது, இன்னமும் முழசா பதிவேற்றம் பண்ண முடியலை.  நமக்கு இருக்கிறதே இன்னமும் ஒன்றரை வருஷம்தான். இதுல இந்தியா பூரா நரிக்குறவங்கள மாதிரி ஆளுங்களுக்குக் குடுத்த பட்டாவையே எந்த பேங்கிலயும் லோனுக்குன்னு பிணை வைக்க முடியலை… ஆக்கிரமிப்பு அகற்றம்னு கட்டியிருக்கிற வீடு, ஆஸ்பத்திரின்னு இடிக்க வேற ஆரம்பிச்சுட்டீங்க… பாதிப் பேருக்கு ஆதார் கார்டே இல்லை… இருக்கிற பயலும் பாதிப் பேரு இன்னமும் போன் நம்பர், பேங்க் அக்கவுண்ட், பான் கார்டுன்னு எதையும் இணைக்காம இருக்கான்.  இதெல்லாம் எப்போ முடிஞ்சு, இதுதான் பைனல் ஊருன்னு முடிவு பண்ணி, அதுல நம்பர் எழுதி, அதுக்கு டிஜிட்டல் டேக் போடுவீங்க.

ஏற்கெனவே, போட்ட திட்டமெல்லாம் வகை தொகையில்லாம பொதுஜனங்களை நூத்துக் கணக்கில போட்டுத் தள்ளினதால, ஐயா உங்க ஃபினிஷிங் சரியில்லையா, புது திட்டமெல்லாம் ஏதும் வேண்டாம்னு ஊருல அம்புட்டுப் பயலும் அழுதுட்டிருக்கான்… கேக்க மாட்டேங்குறீங்களே.  சரி, என்னவோ பண்ணுங்க… பண்றப்போ சில விஷயங்களை தயவு செஞ்சு முன்னாடியே செஞ்சிடுங்க.  அது என்னன்னா, முதல்ல அந்த நம்பரைப் போட்டு ஒரு கார்டை இதான் உன் அட்ரஸ்னு சொல்லிக் குடுத்துட்டு, அதை மறுபடி போய் ஆதார் நம்பரோட இணைக்கச் சொல்லாம, இதையாச்சும் முன்னாடியே ஒரே வாட்டியா செஞ்சிடுங்க.  எனக்கென்னவோ எப்படியும் அதைத்தான் பண்ணப் போறீங்கன்னு நினைக்கிறேன். காரணம், எல்லா ஊருலயும் நம்பர் குடுத்து முடிச்சப்புறம் அது யாரு சொத்துன்னு கண்டுபிடிக்க அந்தந்த ஊரு தாகில்தார் ஆபீசுல, அந்த ஊருல சொத்து வச்சிருக்கிறவன் போய் ஆதார் பதிஞ்சாத்தான் கண்டுபிடிக்க முடியும்.

கடைசியா கேக்கனும்னு தோணுன ரெண்டு கேள்விகளைக் கேக்குலாங்களா??? பணம் வாங்கிட்டு ஆதார் கார்டு கொடுத்ததா நீங்க மூடின 49,000 ஆதார் மையங்கள்ல வாங்குன ஆதார் கார்டுகளும் ஆதார் வசதிகளை அனுபவிச்சுட்டுத்தான இருக்கும்??? அப்புறம், 19 லட்சம் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளை Identity Theft-னு சொல்லி மாத்திக் குடுத்த SBI அளவுக்கு இல்லாம, நம்ம தேசத்தோட கணினி தொழில்நுட்பப் பாதுகாப்பு ஸ்திரமாத்தான இருக்கு… இல்லைன்னா, அப்புறம் இந்தியால எவனுக்கும் சொத்து பத்துன்னு எதுவும் இருக்காது… இல்லாட்டி, அமெரிக்காகாரன் ஏன் இத்தனை வருஷமா இதெல்லாம் பண்ணாம இருக்கப் போறான்… அவன்ட்ட இல்லாததா…

அப்புறம் ஃபினிஷிங் மேட்டருக்கு வருவோம். ரேஷன் கார்டு, பான் கார்டு, லைலென்ஸ், போன் நம்பர், பேங்க் அக்கவுண்ட், இப்போ அட்ரஸ் கார்டுன்னு தனித்தனியா இணைச்சுட்டிருக்கிறதுக்கு பதிலா, பேசாம ஆதார் கார்டுதான் எல்லாமேன்னு ஏன் சொல்லலை… குறைஞ்சபட்சம் லாஸ் ஆப் பே-ல கார்டுகளை இணைக்கிறதுக்கு லீவு போட்ட காசாவது மிச்சமாகியிருக்கும் இல்லை??? என்னதாங்க உங்க ஐடியா??? 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top