#ShirtButton ஆண்களின் ஷர்ட் பட்டன் வலப்பக்கத்திலும், பெண்களின் ஷர்ட் பட்டன் இடப்பக்கத்திலும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
  • 17:53PM Sep 21,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:53PM Sep 21,2019 Chennai

உலகின் சிறந்த கண்டுபிடிப்புகளில் உடையில் இருக்கும் பட்டன் (Button) மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இந்தப் பட்டன் பயன்பாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சங்கு, இரும்பு, தங்கம் போன்றவற்றால் செய்யப்பட்டு வந்த இந்தப் பட்டன்கள் தற்போது பிளாஸ்டிக்கால் செய்யப்படுகிறது. பொதுவாக ஆண்களின் ஷர்டில் இருக்கும் பட்டன்கள் வலப்பக்கத்திலும், பெண்களின் ஷர்டில் இருக்கும் பட்டன்கள் இடப்பக்கத்திலும் இருக்கும். இதற்கு வரலாற்று ரீதியாகச் சில காரணங்களைத் தெரிவிக்கின்றனர். அந்தக் காரணங்களை இங்குப் பார்ப்போம்.

#SMARTSHIRTS: ஆண்களிடம் அவசியம் இருக்க வேண்டிய 5 விதமான சட்டைகள்!!! TIMELESS APPEAL!!!

via GIPHY

பிரான்ஸ் நாட்டை ஆண்ட Napoleon Bonaparte எப்போது தனது கோட்டின் உள்பக்கத்தில் கை வைத்தது போலவே போஸ் கொடுத்திருப்பார். அந்தக் கோட்டில் இதுபோல உள்ளே கை வைக்க வேண்டும் என்றால் கோட்டின் பட்டன் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் போவதை போல இருக்கவேண்டும். இப்படி இருக்க, Napoleon Bonaparte எப்போதும் கையைப் பெண்களைப் போல உள்ளே வைத்துள்ளார் என்று கிண்டலடித்துள்ளனர். இதனால் எந்த உடை வடிவமைத்தலும், அதில் ஆண்கள் ஆடையில் இருப்பதற்கு எதிர்பக்கமாகவே பெண்களின் ஆடையில் பட்டன் இருக்கவேண்டும் என்று ஆணையிட்டார். இது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது, அதேபோல அந்தக் காலத்தில் ஆண்களே தங்களின் ஆடைகளை அணிந்து கொள்வார்கள், பெண்களுக்கு அவர்களின் வேலையாட்கள் உடை அணிந்து விடுவார்கள். அப்படி வேலையாட்கள் சுலபமாக உடை அணிந்து விடப் பெண்களின் ஆடைகளில் பட்டன் இடப்பக்கத்தில் வைத்துத் தைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

via GIPHY

இதேபோல அந்தக் காலத்தில் பெரும்பாலான ஆண்கள் தங்களின் ஆயுதங்களை உடையில் மறைந்து வைத்திருப்பார்கள். பொதுவாகவே அனைவரும் வலது கையைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அவ்வப்போது அவசரத்தில் அவர்கள் சுலபமாக ஆடையை அவிழ்த்து ஆயுதத்தை எடுக்கப் பட்டன்கள் வலதுபக்கமாக இருந்தால் வசதியாக இருக்கும் என்று வலப்பக்கத்தில் வைத்துத் தைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள பெண்கள் தாங்கள் எதிலும் ஆண்களை விடக் குறைந்தவர்கள் இல்லை என்பதாலும், ஆண்களைக் காட்டிலும் வேறுபட்டுத் தெரியவேண்டும் என்பதற்காகவும் ஷர்ட் பட்டனை இடப்பக்கத்தில் தைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top