#Hindu religion: இந்து சமயத்தில் இத்தனை இருக்கா.? தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி!
  • 14:11PM Jul 18,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:11PM Jul 18,2019 India

'இந்து' என்ற ஒரு குடையின் கீழ் கட்டமைக்கப்பட்ட பல பிரிவுகளின் ஒருங்கிணைப்பாக இந்து சமயம் விளங்கி வருகிறது. இத்தனை பிரிவுகள் இருந்தும், இது வரையில் சிதைவுறாமல் தோன்றியது தோன்றியபடியே கட்டிக்காக்கப்பட்ட ஒரு சமயமாக இருந்து வருகிறது. வாழ்வியல் மரபைப் பின்பற்றித் தான் இந்து மதங்கள் உருவாகிஇருக்கிறது. இதற்கு முன்னர் சங்க காலத்தில் 'இந்து' சமயம் எத்தனை பிரிவுகளாக இருந்தது என்பது குறித்து இனி பார்க்கலாம்.

#1. ஆசீவகம் - ஆசீவக மதம். ஒரு தமிழ் மெய்யியல் கொள்கை ஆகும். கடவுள் மறுப்புக் கொள்கை உடையது. ஆசீவக மதம் மற்கலியர் கோசாலரால் தோற்றுவிக்கப்பட்டது. மற்கலி கோசாலர், பூரணகாசியபர், பகுத கச்சானர் ஆகியோர் ஆசீவக கோட்பாடுகளை வகுத்துள்ளனர்.

#2. பௌத்தம் - புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதம். மெய்யியல் கொள்கை. கடவுள் மறுப்புக் கொள்கை உடையது. தமிழர் இடையே பௌத்தம் செல்வாக்கு பெற்று மெய்யியலில் முதன்மை பெற்றதாகத் திகழ்ந்திருக்கிறது.

#3. திகம்பர ஜைன மதம் - நிகண்டவாதம். மெய்யியல் கொள்கை. கடவுள் மறுப்புக் கொள்கை உடைய மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்ட மதம்.

#4. சைவ சமயம் - சிவநெறி என்று அழைக்கப்படும் சைவ நெறி, சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். வேறு எந்தப் பிரிவுடனும் சேராமல் சைவம் தனிப்பெரும் மதமாக தனித்தியங்கிய காலகட்டம். தமிழர்கள் தங்களை வீர சைவர்கள் என கூறிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

#5. வைதிக மார்க்கம் - வைதிக மார்க்கம் பத்து அளவை நெறிகளைப் பின்பற்றுவது.

#6. வைசேடிகம் - கணாதர் பாகாஸ்ய என்பவரால் இயற்றப்பட்ட மதம். மற்ற மதங்களை விட சிறப்பானதாக அவர்கள் இதை கருதியதால் விசேடம் அல்லது வைசேடிகம் என அழைக்கப்பட்டது.

#7. சாவகம் - பூதவாதம் அல்லது சார்வகம் என அழைக்கப்படும் உலகாயதம், தமிழகத்தில் தோன்றிய ஒரு மெய்யியல் கோட்பாடு. புலனறிவாதம் , நிரூபணவாதம், அல்லது அனுபவவாதம் என்பது மெய்ப்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய அணுகுமுறை ஆகும்.

#8. சாங்கியம் - கபிலரால் இயற்றப்பட்ட தத்துவம். இயற்கையையும் மனிதனையும் மையமாகக் கொண்ட மதம். கடவுள் வெளியே இல்லை உனக்குள்ளே இருக்கிறான் எனும் தத்துவக்கொள்கை.

#9. பிரமவாதம் - பிரம்மனை மட்டுமே வணங்குவோர். உலகமெல்லாம் பிரம்மனிட்ட முட்டை தான் என்னும் மதக்கோட்பாடு.

#10. வேத மதம் - வேதங்களை மையமாக மட்டுமே கொண்ட மதத்தை சார்ந்தவர்கள். வேதங்கள் பொதுவாக இன்று அறியப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண நூல்களின் மதம்.

#Hindu religion: மேற்கூறிய இந்த பிரிவுகள் எல்லாம் சங்க காலத்தில் தமிழகத்தில் நிலவியதன் சான்றாக தமிழின் ஐம்பெரும் காப்பியமான மணிமேகலையில் சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top