Lushgreen

ஹீல்ஸ் வகை செப்பல்கள் உருவாக்கப்பட்டது இதற்காகவா? இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே!

Oct 11 2021 02:56:00 PM

தற்போது இருக்கும் நவீன உலகத்தில் ஆடம்பரம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதிலும் உடை முதல் நடை வரை நாகரீக போதையில் மனிதன் செய்யும் செயல்கள் அனைவரையும் சற்று முகம் சுளிக்க வைக்கிறது. குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் ஹீல்ஸ் வகை செப்பல்கள்.

high-heels army-chappels

இயற்கையின் படைப்பில் அழகான விஷயம் பெண்கள். பெரும்பாலான பெண்களின் மனக்குறையாக உள்ளது அவர்களின் உயரம். அவர்களின் சராசரி உயரம் குறைவாக உள்ளதாக அவர்களுக்கு உருவாகும் தாழ்வு மனப்பான்மை காரணமாக, தங்களின் உயரத்தை மற்றவர் விமர்சனம் செய்யக்கூடாது என்பதற்காக, பெண்கள் பெரும்பாலும் இந்த ஹீல்ஸ் செப்பல்களை தேர்வு செய்வதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

high-heels army-chappels

உண்மையில் இந்த ஹீல்ஸ் செப்பல்கள் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், ஹீல்ஸ் வடிவிலான செப்பல்கள் ராணுவ வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது. அதுவும் இது கி.மு 10-ம் நூற்றாண்டில் இருந்து நடைமுறையில் உள்ளதாக சில வரலாற்று தகவல்கள் உள்ளன. தற்போது இருக்கும் ராணுவ வீரர்களை போல இல்லாமல், அந்த காலத்தில் இருந்த ராணுவ வீரர்கள், அளவில் சற்று உயரம் குறைந்தவர்களாவே இருந்துள்ளனர். முதலில் அவர்களுக்காகத்தான் ஹீல்ஸ் வடிவிலான செப்பல்கள் உருவாக்கப்பட்டது.

high-heels army-chappels

இதனை பயன்படுத்திய நோக்கம் என்னவென்றால், இந்த விதமான பூட்ஸ் அணிந்த வீரர்கள் மற்றவரை போல அல்லாமல், போரின்போது எதிரிகளின் வருகையை முன்கூட்டியே காணும் அளவிற்கு இது உதவியுள்ளது. அதனால் அவர்கள் தாக்குதல் எதிரிகளை நிலைகுலைய செய்துள்ளது. இவ்வாறு ஆண்களின் போருக்கான யுக்தியாக பயன்படுத்தப்பட்டு வந்த ஹீல்ஸ் வகை செப்பல்கள் தற்போது ஆடம்பர பொருளாக மாறியுள்ளது.

high-heels army-chappels

பெண்களே உண்மையில் நீங்கள் எப்படி படைக்கப்பட்டுள்ளீர்களோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த வித ஹீல்ஸ் செப்பல்கள் போட்டு தான் உங்களை உயர்த்தி காட்ட வேண்டும் என்பது இல்லை. உங்களின் அளப்பரிய திறமைகளை மெருகேற்றுங்கள், அது உங்களை இந்த சமுதாயத்தில் மிகவும் உயர்த்தி காட்டும்.