#Helmet : டூ வீலரில் ஹெல்மெட் போடாமல் போனால் அவ்வளவுதான் !!!
  • 12:01PM Jun 07,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 12:01PM Jun 07,2019 Chennai

இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து தான் பயணிக்க வேண்டும் என்பது போக்குவரத்து விதியாகும்.அதற்கு காரணம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதே உயிரிழப்பு அதிகமாவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது ஆனால் அதனை யாரும் பின்பற்றவில்லை என நீதிமன்றம் கவலையுடன் குறிப்பிட்டுள்ளது.

helmet5.jpg

நீதிபதிகள் பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதி கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது போல தமிழகத்தில் ஏன் முடியவில்லை? தமிழகத்தில் ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

helmet3.jpg

மேலும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதி மன்றம்.

helmet4.jpg

இதற்கு பதிலளித்த தமிழக அரசு ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதனால் வருங்காலத்தில் ஹெல்மட் அணியவில்லையென்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது கவனம்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top