ஊடகங்கள் சொல்லாத உ.பி. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.
  • 16:57PM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 16:57PM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India

உத்திரப்பிரதேச தேர்தலில் உண்மையாக நடந்தது என்ன, அதனை ஊடகங்கள் எவ்வாறாகச் சொல்லி இருக்கின்றன என்பதை அறியும் போது நமக்கு வியப்பே மிஞ்சுகிறது. பாஜக யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் உண்மையான ஓட்டு வங்கி எத்தனை மோசமான பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பது நமக்குப் புரியும். இதன் காரணமாகவே, குஜராத் தேர்தலில் பாஜக வழக்கத்திற்கு மாறான பரபரப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறது. 22 வருடங்கள் பாஜக கோட்டையாக இருக்கும் குஜராத் தகர்ந்தால், மக்கள் பாஜகவின் எந்தத் திட்டத்தையும் அங்கீகரிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடும். சரி, தற்போது, உ.பி.யில் நடந்ததைப் பார்ப்போம்.

முதலில் தேர்தல் நடந்த முறை. மாநகராட்சித் தேர்தலுக்கு மட்டும் மின்னணு இயந்திர வாக்குப் பதிவு பயன்படுத்திவிட்டு மற்றவைகளுக்கு வாக்குச் சீட்டு மூலம் வாக்குப் பதிவு செய்யப்பட்டன. ஊடகங்கள் மாநகராட்சி முடிவுகளை மட்டுமே முன்னிறுத்தி, தேர்தல் முடிவுகளை வெற்றியாகக் காட்டிக் கொண்டிருக்கின்றன.  அப்படியென்றால் உ.பி.யின் உண்மையான கள நிலவரம்தான் என்ன?  மின்னனு வாக்குப்பதிவு நடந்த அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், உண்மையில் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது.  இது மட்டுமல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை எதிர்த்து தற்போது எதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்கியிருக்கிறார்கள்.

காரணம், வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடந்த நகராட்சி, நகராட்சி வார்டுகள், பேரூராட்சி, பேரூராட்சி வார்டுகள், ஒன்றியங்கள், ஒன்றிய வார்டுகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் போன்றவற்றில் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது.

 

மொத்தத் தொகுதி

பிஜேபி வெற்றி

பிஜேபி தோல்வி

மாநகராட்சி

16

14

2

மாநகராட்சி வார்டுகள்  

1300

535

765

நகராட்சி

195

68

127

நகராட்சி வார்டுகள்

5261

914

4347

பேரூராட்சி

438

100

338

பேரூராட்சி வார்டுகள்

5434

662

4772

ஒன்றியங்கள், ஒன்றிய வார்டுகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் போன்றவற்றில் பாஜக நிலைமை இதை விடவும் மோசம். குறிப்பிட்டுச் சொல்லப்படும் தொகுதிகளில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதியில் 18 வார்டுகளில் சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளனர். 64-வது வார்டில் பாஜகவை ஒரு சுயேச்சை வேட்பாளர் வீழ்த்தியுள்ளார். அயோத்தி நகராட்சியில் பாபர் மசூதி இருந்த வார்டிலும் கூட பாஜக தோல்வியையே சந்தித்துள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்காக மாநகராட்சி தேர்தல் முடிவுகளை மாபெரும் வெற்றியாக பூதாகரமாக காட்டுகிறார்கள். எது எப்படியோ, மக்கள் தங்களின் கோபத்தைக் காட்டத் துவங்கி விட்டார்கள்.  மக்களை அலட்சியமாக எண்ணிய பாரதப் பிரதமரையே இன்று மக்கள்தான் என் கடவுள் என்று குஜராத்தில் பேச வைத்த பெருமை நிச்சயமாக உத்திர பிரதேசத்தையே சேரும்.

மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பு!!!

நன்றி : Outlookindia.com 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top