ஆதாருக்கே ஆதார்!!!
  • 14:43PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:43PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India

செம ப்ளானிங் பண்ணி நடைமுறைப்படுத்தப்பட்டதா சொல்லப்படுற ஆதார், இப்போ அடுத்த லெவல்ல பல்லைக் காட்டிக்கிட்டு இருக்கு… கூடவே டிஜிட்டல் செக்யூரிட்டி பற்றிய நமது பயமும்.  இந்தத் தகவல் கிடைச்சப்போ லேசா வயித்துல புளியைக் கரைச்ச மாதிரி ஃபீலிங் வந்ததென்னவோ வாஸ்தவம்தான். ஏற்கெனவே ரெண்டு மாசத்துக்கு முன்னாடி 49,000 தனியார் ஈ-ஆதார் மையங்களை, காசு வாங்கிட்டு ஆதார் கார்டு கொடுத்ததா சொல்லி மத்திய அரசே மூடச் சொன்னப்பவும் இப்படித்தான் புளியைக் கரைச்சுது.  இப்போ எல்லாத்துக்கும் ஆதாரம்னு சொன்ன ஆதாருக்கே ஆதார்ன்னு சொன்னதைக் கேட்டப்போத்தான் உண்மையிலேயே ரொம்பக் கவலையா இருக்கு.

அதென்னங்க ஆதாருக்கே ஆதார்னு கேக்குறீங்களா??? ஆதார் வந்த புதுசுல கிட்டத்தட்ட 200 இணையங்களுக்கு மேல ஆதார் தகவல்களை பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டுச்சு. இதுல அரசு தன் செயல்பாட்டிற்காகப் பயன்படுத்தியது நாலுல ஒரு பங்குதான்.  இதன் மூலமா, நிறைய ஆதார் எண்கள் மற்றும் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம்னு 2 வருஷம் கழிச்சு சந்தேகம் வந்து இப்போ மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற புரட்சிகரமான திட்டம்தான் இந்த ஆதாருக்கே ஆதார்.  கண்டிப்பா இது நான் வச்ச பேருதான்.  ஏன்னா, தகவலை முதல்ல கேட்டப்போ இதுதான் தோணுச்சு எனக்கு.

சரி! மேட்டருக்கு வருவோம்.  ப்ளஸ் டூ பரிட்சை எழுதறப்போ, நம்ம ஹால் டிக்கெட் நம்பர் எழுதுவோம் இல்லை, அதுக்கு அப்புறம் நாம பேப்பர் சேஸிங் பண்ணிடக் கூடாதுன்னு ஒரு டுப்ளிகேட் நம்பர் குடுப்பாங்க இல்லை, அதே மாதிரி நம்ம ஆதார் கார்டுக்கும் ஒரு டூப்ளிகேட் நம்பர் குடுப்பாங்களாமா… இனிமே ஆதார் கார்டு தேவைப்படற இடத்துல எல்லாம் அந்த நம்பரைக் குடுக்கனும்னு சட்டம் போடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்காங்களாமா… இப்போ புரியுதா இதை நான் ஏன் ஆதாருக்கே ஆதார்னு சொல்றேன்னு…  டிஜிட்டல் செக்யூரிட்டி பத்திக் கொஞ்சம் கூடக் கவலைப்படாம இப்படித் திட்டங்களை செயல்படுத்தறது என்ன டிசைனோ தெரியலை…

ஏன் டிஜிட்டல் செக்யூரிட்டி, டிஜிட்டல் செக்யூரிட்டின்னு புலம்பிட்டிருக்கேன்னு இப்போ புரியுதா.  ஒருவேளை நாளைக்கு என் வீட்டுப் பத்திரங்கள், வரவு செலவுன்னு எல்லாத்தையும் நான் டிஜிட்டலைஸ் பண்ணிட்டு, அன்னைக்கு பாகிஸ்தானோ, சைனாவோ-ஏன் இந்தியாலயே யாராவதோ ஒரே வைரஸால மொத்தத்தையும் அழிச்சுட்டா அல்லது அவன் பேருக்கு மாத்திட்டா அப்போ ஒருத்தனுக்கும் சொத்து பத்து என்ன, பத்து பைசா கூட இருக்காது.  இதான் நமக்குத் தேவையா என்ன??? ஆதார் மாதிரியான திட்டங்களைப் போடுறது ஈசி, ஆனா ஆதாரோட உண்மையான பலன் 100% டிஜிட்டலைஷேசன் மூலமாத்தான் கிடைக்கும்.  ஆனா, அதுக்கு மத்திய அரசு இன்னும் மிக முக்கியமான மூன்று கட்டங்களைக் கடந்தாக வேண்டும்.  மிகத் துல்லியமான திட்டமிடல் இல்லாம அது நடக்காது, அது நடக்கலைன்னா இத்தனை திட்டங்கள், செலவு செய்த பணம் எல்லாமே வீண்தான். 

என்னன்னு கேட்கறீங்களா??? சும்மா ஐடியா குடுக்கிறதுக்கு என்னை என்ன கோவிலுக்கா நேர்ந்து விட்டிருக்காங்க… என்ன நான் சொல்றது???  

Top