#Bike : இனி ஹீரோ பைக்கை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் உங்கள் இல்லம் தேடி வாகனம் வரும் !!!
  • 09:23AM Oct 14,2019 India
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 09:23AM Oct 14,2019 India

இன்றைய நவீன காலத்தில் அணைத்து பொருள்களும் ஆன்லைன் மூலமாகவே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் ஒரு சில பொருட்களை தவிர அதில் பைக்கும் ஒன்று இப்போது அந்த குறையை போக்கியுள்ளது ஹீரோ மோட்டோ கார்ப் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகன உலகின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள  இந்த  நிறுவனம், அனைத்து தரப்பு மக்களும்  பயன்பெறும் வகையில் பட்ஜெட் முதல் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் வரை  தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.

hero moto.jpg

தற்பொழுது ஹீரோ மோட்டோ கார்ப்  நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் .தங்களது  வாகனங்களை  ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த வாகனத்தை ஹோம் டெலிவரி செய்ய இருப்பதாக  தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை டெலிவரி கட்டணமாக   ஹீரோ நிறுவனம் வசூலிக்க இருக்கின்றது.

hero4.png

இதற்காகவே ஹீரோ நிறுவனம் இந்த பிரத்யேக வசதிக்காக தனி தளம் ஒன்றை தயாரித்திருக்கின்றது. https://www.hgpmart.com என்ற முகவரியில் உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்கு சென்று தங்களுடைய தகவல்கள் சிலவற்றை பதிவு செய்து, புக்கிங் செய்துகொள்ளலாம்.இனிமேல் நீங்கள் செய்ய வேண்டியது ஹீரோ நிறுவனத்தின் வாகனத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து பணம் காட்டினால் போதும் ஹீரோ நிறுவனம்உங்கள்  இல்லம் தேடி வந்து வாகனத்தை கொடுப்பார்கள் .

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top