Highrise

என்றும் இளமையாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், இப்படி மட்டும் குளித்து பாருங்கள்

Apr 07 2021 08:31:00 PM

அழகாக இருக்க வேண்டும் என்று எல்லாருக்கும் ஆசை இருக்கும். அதற்காக பலரும் அழகு நிலையங்களுக்கு சென்று விதவிதமாக மேக்கப் போட்டு காசை கரியாக்குகின்றனர். அப்படியும் அவர்களுக்கு திருப்தி ஏற்படாது. ஆனால் செலவு அதிகம் இல்லாத இயற்கை முறையை பற்றி யாரும் சிந்திப்பதே கிடையாது.

herbal-bathi-powder

கெமிக்கல் கலந்த சோப்பு, பவுடர்,ஷாம்பூ பயன்படுத்துவதினால் பலருக்கும் சரும அலர்ஜி உண்டாகலாம். அதை தவிர்க்க இயற்கை பொருட்களுக்கு மாற வேண்டும். உங்கள் உடல் சூட்டை தணிக்கவும், உங்கள் தலை முடியை அழகாக பராமரிக்கவும் இந்த இயற்கை மூலிகை குளியல் பொடியை பயன்படுத்தி பாருங்கள்.

herbal-bathi-powder

கஸ்தூரி மஞ்சள், சோம்பு, அகில் கட்டை, வெட்டி வேர், சந்தனம், தும்மராஷ்டம், கார்போக அரிசி, கோரைக்கிழங்கு, விலாமிச்சை, பாசிப்பயிறு இவையனைத்தையும் காயவைத்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். குளிக்கும் போது சிறிதளவு தண்ணீரில் இந்த பொடியை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து பாருங்கள். இது அவ்வளவும் இயற்கை மூலிகைகள் என்பதால் உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. சொறி சிரங்கு போன்ற பிரச்சனைகள் நீங்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளி, கண்களில் தோன்றும் கருவளையம், முகப்பரு, வேர்க்குரு போன்றவற்றையும் இந்த மூலிகை குளியல் பொடி நீக்கி விடும்.