#Married Life : உயரமான பெண் குள்ளமான ஆண் திருமணம் செய்தால் தாம்பத்திய உறவு என்ன ஆகும்..?
  • 20:30PM Jun 12,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 20:30PM Jun 12,2019 Tamil Nadu

உயரமாக இருக்கும் ஒரு ஆண் உயரம் குறைவாக உள்ள ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறது இப்போது சாதாரணம் தான். ஆனா இதுவே உயரமான ஒரு பெண், உயரம் குறைவான ஆணை கல்யாணம் செய்து தம்பதியராக மாறுவது மிக மிகக் குறைவுன்னு தான் சொல்லணும். உயரமான பெண்கள் தன்னை விட அதிகாரமிக்கவளா ஆண்கள் நினைக்கிறதால தான் இப்படி நடக்குதாமா. அது போக தாம்பத்திய உறவுக்கும் உயரம் ஒரு காரணமா சொல்லப்படுது.

கல்யாண வரன் பாக்கும் போது உயரம் பார்க்க முக்கிய காரணம் வாய்களின் பொருத்தம்னு சொல்றாங்க. மண்வாய்,பொன்வாய், பால்வாய்னு சொல்லி மொத்தம் 3 வகையா பிரிக்கிறாங்க. இதுல மண்வாய்னா ஆண் உயரமா இருந்து, பெண் உயரம் குறைவா இருக்கறது. இப்படி தம்பதியினர் அமைந்தால், உறவின் போது ஆணின் வாயானது பெண்ணின் தலைக்கு மேலாக மண்ணை நோக்கி அமையுங்கறதால அப்படி சொல்றாங்க.

ஆணும், பெண்ணும் ஒரே அளவு உயரம் இருக்கும் போது அத பொன்வாய்னு சொல்வாங்க. அதே ஆண் உயரத்தை விட, பெண் உயரமா இருந்தா அத பால்வாய்னு சொல்வாங்க. உயரமா இருக்க பெண் குள்ளமா இருக்க ஆணுடன் உறவு கொள்ளும்போது உயர பிரச்சனையால் ஸ்பரிச தொடுதல் குறைந்து இன்பமும் குறையும். இதனால பிற்காலத்தில் சண்டைகள் வரும்.

இப்படி ஆகிருச்சேனு மனம் ஒத்து கல்யாணம் செஞ்சுகிட்ட தம்பதிகள் கவலைப்படுவதே இல்லை. மனம் பொருத்தினால், மற்றவை எதுவும் தேவையில்லை. இருந்தாலும் உடல் ரீதியான எதிர்பார்ப்பு இருக்க தம்பதிகளுக்கு உயரம் அவசியமாகுது. அதுக்காக தான் திருமண விஷயங்களில் நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டு நடப்பதே புத்திசாலித்தனம்னு சொல்றாங்க. எல்லாமே ஒரு காரணத்தோட இருக்கும்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top