#Weatherman: என்ன ஆக போகுதோ! 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடந்த சம்பவம் : வானிலை ஆய்வாளரே வருத்தத்தில்.
  • 11:49AM Aug 09,2019 Avalanche Lake
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:49AM Aug 09,2019 Avalanche Lake

24 மணி நேர காலஇடைவெளிக்குள் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத உச்சபட்ச மழைப்பொழிவை கடந்த சில நாட்களாக எதிர்கொண்டு வருகிறோம். தென்னிந்திய வரலாற்றில் இப்படியொரு மழைப்பொழிவு பதிவானது சாதனை அளவாக பார்க்கப்படுகிறது. குறைந்த கால இடைவெளிக்குள் அதிக மழை பெய்த வரிசையில், உலக அளவில் சரித்திர பதிவாக பார்க்கப்படுகிறது. சுற்றுலா செல்ல திட்டமிட்டவர்கள், காலநிலை சரியாகும் வரை, ஊட்டி, நீலகிரி, மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதி, கேரளா போன்ற இடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது.

அதிர்ச்சியளிக்கும் விதமாக ஊட்டி அவலாஞ்சி பகுதியில் 24 மணி நேரத்திற்குள் 911mm மழை பதிவாகியுள்ளது. சரித்திரத்தில் இப்படியொரு நிகழ்வு நடந்தது இல்லை. மூன்று நாட்கள் பெய்த மழையின் மூலம் உலக அளவில் உற்றுநோக்கப்படும் பகுதியாக அவலாஞ்சி மாறியுள்ளது. 09.08.2019 அன்று 911 mm மழையும், 08.08.2019 அன்று 820 mm மழையும், 07.08.2019 அன்று 405 mm மழையும் பதிவாகியுள்ளது.  1731 mm மழைப்பொழிவு 48 மணி நேரத்திலும், 2136 mm மழைப்பொழிவு 72 மணி நேரத்திலும் பதிவாகியுள்ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டு June 15 மற்றும் 16  ஆகிய தேதிகளில், உலகில் மழை பெறும் பகுதியாக கூறப்படம் சிரபுஞ்சியில் 2493 mm மழைப்பொழிவு பதிவானது. 1958 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில்  La Réunion தீவில் 48 மணி நேரத்தில்  2467mm மழைப்பொழிவு பதிவானது. அதற்கு அடுத்து உலகில் அளவில் சாதனை பதிவாக தமிழகத்தில் பெய்த மழைப்பொழிவு இடம்பெற்றுள்ளது. பாதிப்புகள் வெளியே தெரியாத காரணத்தினால் இன்னும் ஊடகங்களில் காட்டப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை எதிர்கொள்ளாத மழைப்பொழிவை பெற்றுள்ளது. பொள்ளாச்சியில் மட்டும் 160 mm மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மழை ஆரம்பமான தொடக்கத்தில் தமிழக அளவில் சாதனை அளவாக பார்க்கப்பட்டது இன்றைக்கு தென்னிந்திய அளவில் முந்தைய அளவை முறியடித்துள்ளது. இன்னும் மழை தொடர உள்ள நிலையில், அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பதிப்பை ஓரளவுக்காவது எதிர்கொள்ள முடியும். | இந்தியாவின் ஜுராஸிக் பார்க் எங்கே உள்ளது தெரியுமா?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top