சிகரெட் என்னைப் பிடித்த கதை…
  • 09:05AM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 09:05AM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஒரு காலத்துல யோக்கியன்னாலும் யோக்கியன் அவ்வளவு யோக்கியன்.  இந்த சிகரெட் கருமத்தைக் கண்டாலே ஆகாது.  நான் வேற ஆளு ஒரு சைசா, தாட்டியா, உசரமா வேற இருப்பனா எங்கூர்ல எவனாச்சும் தெரிஞ்சவன் கண்ணு முன்னாடி சிகரெட்டை எடுத்தான் அத்தோட சரி, அந்த சிகரெட்டை புடுங்கி, கண்டதுண்டமா பிச்சு வீசிட்டுத்தான் போவேன்.  திமிருக்குக் காசு குடுத்து பாக்கெட் வாங்கி (அப்பொல்லாம் கிங்ஸே வெறும் 3.75 தான்)  உடைச்சு விசிறி வெறுப்பேத்தி விட்டுட்டுதான் போவேன்.  இப்படி ஓவரா ஆடினதாலயோ என்னவோ, அந்தக் கருமம் பிடிச்ச சிகரெட், நான் எப்படா மாட்டுவேன்னு காத்துகிட்டிருந்த மாதிரி இருக்கு.  வழக்கமா தம் அடிக்கப் பழகற ஸ்கூல், காலேஜ் எல்லாம் சிகரெட்டை இப்படி வச்சு செஞ்சே தாண்டிட்டேன்.  இனி சிகரெட் என் லைப்ல என்னைத் தொடாதுன்னு சொல்லிக் கொஞ்சம் தெம்பாயிட்டேன். 

வேலைக்குப் போக இஷ்டமில்லாம சொந்தத் தொழில் ஒன்னு ஆரம்பிச்சேன்.  ரொம்பப் பாடு… சமயத்துல ராத்திரி பகல் பார்க்காம வேலை செய்வோம்.  சில நேரத்துல 4, 5 நாள் கூட தூங்காம வேலை செய்வோம்.  எங்க ஊருக்குப் பக்கத்துல ஒரு வாய்க்காலு இருக்கு.  4, 5 நாள் வேலை செய்யறப்போ உடம்பு சூடாய்டும்னு இராத்திரி கொஞ்சம் அலுப்பா தோணறப்போ நேரா வாய்க்காலுக்கு போய் குளிப்போம்.  பெரும்பாலும் நாங்க போற நேரத்துல பேய்ங்க கூட குளிச்சு முடிச்சுட்டு போயிருக்கும். இராத்திரி 2 மணி, 3 மணிதான்.  நல்லா குளிரும்.  வீட்டுக்கு வந்து சூடா டீ போட்டுத் தரச் சொல்லிக் குடிச்சுட்டு, ஒரு அரை மணி நேரம் வெட்டிக்கதை பேசிட்டு மறுபடி வேலையை ஆரம்பிச்சுடுவோம். 

அப்பத்தான் ஒரு நாளு கொஞ்சம் வேலை ஜாஸ்தின்னு என் பிரெண்டு ஒருத்தனைக் கூட ஒத்தாசைக்கு வரச் சொன்னேன்.  வழக்கம் போல வேலை முடிஞ்சதும் வாய்க்காலுக்கு போனா, அன்னைக்குன்னு பார்த்தா செம்மக் குளிரு… இவன் ஜட்டியோட உட்கார்ந்து தம்மடிச்சுட்டு இருந்தான்.  கேட்டா, இது இருக்கிறதால குளிரு தெரியாதுன்னு சொல்ல அங்கதான் இந்த சிகரெட் பேய் என்னை பிடிச்சது.  அப்பக் கூட உள்ள தம் கட்டுற பழக்கம் எல்லாம் கிடையாது… வாயில சும்மா வச்சுட்டு ஊதிடுவேன், அவ்ளோதான்.  ஒரு நாள் தம்மடிக்கிறப்போ கூட இருந்த சொந்தக்காரப் பய, தம்மடிக்கிறதுன்னா ஒழுங்கா அடி, இல்லை அடிக்காம விட்ரு… காசை வேஸ்ட் பண்ணாதேன்னு சொல்ல, வீம்புக்கு உள்ளே இழுத்தேன். 

இந்தப் பேய் கிட்டத்தட்ட பத்து வருஷமா என்னைப் பிடிச்சுட்டு விடமாட்டேன்னு தோளிலயே உட்கார்ந்துட்டு சுத்துது.  ரெண்டு மூணு மாசம் அடிக்காம கூட விட்ருவேன், ஆனா மறுபடி அந்தப் பேய் திரும்ப வந்து பிடிச்சுக்கும்… இப்படி நாள் தவறாம அது கூட சண்டை போட்டிட்ருக்கேன், இன்னுமும் விட்ட பாடில்லை… சொந்தக் காசில சூனியம் வச்ச கதையாப் போச்சு… பயபுள்ளைகளா, ஒண்ணு சொல்றேன் கேட்டுக்காங்க, தயவு செஞ்சு அந்தப் பேயை வீட்டுக்குள்ள விட்ராதீங்க… அப்புறம் என்னைய மாதிரி டெய்லி சண்டைதான்… புரிஞ்சுதா??? 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top