#Keezhadi ட்விட்டரில் ட்ரெண்டான #கீழடி_தேவேந்திரர்_நாகரீகம் ஹேஸ்டேக்! இன்னும் நீங்க மாறலயா?
  • 17:49PM Sep 21,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:49PM Sep 21,2019 Chennai

19-ம் நூற்றாண்டில் இருந்து ஆரியம் மற்றும் திராவிடத்திற்கான கருத்துவேறுபாடு போராட்டம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனிடையில் ஒரு பக்கம் தமிழ் தேசியமும் தனக்கான அங்கீகாரம் வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் போராட்டங்களுக்கு விடையாக அமையும் விதமாகக் கீழடி அகழ்வாராய்ச்சி நடந்து வந்தது. இந்த அகழ்வாராய்ச்சியின் ஆரம்பத்தில் மதுரை அருகே மிகப் பழமையான நாகரிகம் ஒன்று இருந்து வந்தது என்று நிரூபிக்கப்பட்டது. அதன்பின் அங்குக் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கார்பன் டேட்டிங் மூலம் ஆராய்ச்சி செய்ததில் அவை சங்ககாலத்தைச் சேர்ந்த பொருட்கள் என்று நிரூபிக்கப்பட்டது.

தமிழர்களின் கவனத்திற்கு! கிழடியில் மேலும் கிடைத்துள்ள தமிழர் வரலாறு!

இதனைத் தொடர்ந்து அண்மையில் கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் மேலும் சிலபொருட்கள் கிடைத்தன. இதில் தமிழி/தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில பொருட்களும் இருந்தன. இதனைக் கார்பன் டேட்டிங் செய்ததில் சங்ககாலத்தைத் தாண்டி, அதாவது 2600 வருடங்களுக்கு முன்பே இங்கு வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்று, அப்போதே சிறந்த நாகரிக வாழ்க்கை வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முழுத் தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்தச் செய்தி வெளிவந்ததும் ட்விட்டர் வலைத்தளத்தில் திடீரென #கீழடி_தேவேந்திரர்_நாகரீகம் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகியது. இந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களின் முன்னேர்கள் என்று கூறி சிலர் பதிவு செய்து வந்தனர்.

இதில் ஒரு சிலர் அளவுக்கு மீறி, 2600 ஆண்டுகால எங்களது "தேவேந்திரர்" வரலாற்றை, வெறும் 60 ஆண்டுத் திராவிட வரலாறாகச் சுருக்கியதே திராவிடத்தின் சாதனை என்று கூறி பதிவித்தனர். இது திராவிடச் சித்தாந்தத்தைப் பின்பற்றுவர்களிடம் எதிர்ப்பை கிளப்பியது. திராவிடச் சித்தாந்தத்தைப் பின்பற்றும் சிலர், இந்தப் பதிவுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, 2600 ஆண்டு முன்பு எழுத்தறிவு பெற்ற உங்கள் முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன் எங்குப் படிக்கச் சென்றார்கள், அந்த உரிமையைப் பெற்று தந்ததே திராவிடம் தான் என்று பதிவிட்டனர். இந்த ஹேஸ்டேக் தமிழர் பெருமை என்பதையும் தாண்டி சாதிய சாயம் பூசும் விதமாக அமைந்துள்ளதாகவும், கல்வி அறிவு பெற்றும் இந்தச் சமூகம் மாறவில்லை என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top