#Sirumugai Silk: ஓ இதான் விஷயமா!! காஞ்சிபுரம் பட்டுக்கே இல்லாத ஒன்று, அப்படியென்ன சிறுமுகை பட்டில் இருக்கு?
  • 17:34PM Oct 15,2019 Sirumugai
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:34PM Oct 15,2019 Sirumugai

காஞ்சிபுரம், மதுரை, ஆரணியில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள்  எடை மற்றும் விலை அதிகமாக இருக்கும். இப்பட்டு சேலைகளை வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்பதோடு இதனை கட்டுவதும் வீட்டில் வைத்து பராமரிப்பதும் கடினம். இந்நிலையில் சிறுமுகை பகுதியில் முதன்முதலில் கைத்தறியில் சாப்ட் சில்க் எனப்படும் மென் பட்டு சேலைகள் நெய்யப்பட்டு அறிமுகப் படுத்தபட்டது.

மிக மெல்லிய தரமான பட்டு நூலை பயன்படுத்தி வியக்கத்தக்க டிசைன்களோடு முற்றிலும் மனித உழைப்பினால் வெகு நுணுக்கமாக நெய்யப்பட்ட இந்த பட்டு ரகங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் விலையும் குறைவு, பராமரிப்பதும் சுலபம் என்பதால் ஆண்டு தோறும் இதன் விற்பனையும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இன்றைய இளம் பெண்கள் மென்பட்டு சேலைகளையே விரும்பி வாங்குகின்றனர். மேலும் திருமண பட்டுப் புடவைகளில் நுகர்வோர் விரும்பினால் கணினியில் டிசைன் செய்து மணமகன் மற்றும் மணமகளின் உருவங்களை தத்ரூபமாக நெய்தும் தருகின்றனர். 

சீன அதிபருக்கு பட்டு சால்வை  வழங்கியதன் மூலம் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த வருட தீபாவளிக்கு ஆர்டர் மேல் ஆர்டர் வந்து குவிகிறதாம். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை பகுதியில் சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் கைத்தறி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற  இங்கு தயாராகும் மென்பட்டு சேலை ரகங்கள் இதன் தரம் மற்றும் வேலைப்பாடுகள் காரணமாக நாடு முழுவதும் வர்த்தகர்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ளது.

சிறுமுகையில் தயாராகும் கைத்தறி மென்பட்டு, கோரா காட்டன் மற்றும் காட்டன் சேலைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. பட்டு சேலைகளில் போடப்படும் மிக சிறந்த கலைநயம் மிக்க டிசைன்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதினை ஐந்து முறையும் ஒரு லட்சத்து அறுபத்தி நான்காயிரம் வண்ணங்களில் நெய்யப்பட்ட பட்டு சேலைக்கு மாநில அரசு  விருதினையும் சிறுமுகை பகுதி கைத்தறி நெசவாளர்கள் வென்றுள்ளனர் என்பதே இவர்களின் தனிச்சிறப்பிற்கு சான்று. | PHILIPINES: இத்தனை TOURIST-களைத் தாங்கியும், அழகாக இருக்கும் ஒரே இடம்!!! எப்படிச் சாத்தியமானது?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top