Lushgreen

இது ஒன்னும் ஹாலிவுட் படத்துல வர கிராபிக்ஸ் காட்சி இல்லிங்க! இந்த அதிசய இடம் நம்ம பூமியில தான் இருக்குது!

Sep 18 2021 07:51:00 PM

என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவனுடைய சகோதரிக்கு இரண்டு வருடங்களுங்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை வீடு நல்ல வசதி என்பதால் தேனிலவுக்கு வியட்நாம் சென்று வந்தாங்க. வியட்நாமில் உள்ள பிரபலமான இடங்களுள் ஒன்றாக இருக்கும் ஹோ லாங் பே என்ற பகுதிக்கும் அவர்கள் சென்று சுற்றிப்பார்த்தனராம்.

ha-long-bay vietnam

அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை என் நண்பன் என்னிடம் காட்டினான். மேலும் அந்த இடத்தை பற்றிய சில சுவாரசிய தகவல்களையும் கூறினான். இது எப்படிப்பட்ட இடம் என்பதை உங்களுக்கும் கூறுகிறேன் கேளுங்க. ஹோ லாங் பே என்பது வியட்நாமின் குவாங் நின் மாகாணத்தில் அமைந்துள்ள பிரபலமான இடமாகும். ஹா லாங் என்ற பெயருக்கு "இறங்கு நாகம்" என்று பொருள்.

ha-long-bay vietnam

இந்தப்பகுதியில் சுண்ணாம்பு கற்கள் நிறைந்த ஏகப்பட்ட தீவுகள் அமைந்துள்ளன. ஹோ லாங் பே என்பது ஒரு பெரிய மண்டலத்தின் மையமாகும். இதில் வடகிழக்கில் பாய் து லாங் விரிகுடாவும், தென்மேற்கில் கோட் பா தீவும் அடங்கும். இந்த பெரிய மண்டலங்கள் ஒத்த புவியியல், காலநிலை மற்றும் கலாச்சார பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

ha-long-bay vietnam

ஹோ லாங் பே சுமார் 600 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 1,960-2,000 தீவுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சுண்ணாம்புக் கல் தீவுகள் ஆகும். விரிகுடாவின் மையப்பகுதி 129 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த விரிகுடாவில் உள்ள சுண்ணாம்பு கற்கள் 500 மில்லியன் ஆண்டுகளில் உருவானது.

ha-long-bay vietnam

ஹோ லாங் பேவில் 14 உள்ளூர் மலர் இனங்கள் மற்றும் 60 உள்ளூர் விலங்கினங்கள் உள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் இருந்ததை வரலாற்று ஆராய்ச்சி ஆய்வுகள் காட்டுகின்றன. 1962 ஆம் ஆண்டில், வடக்கு வியட்நாமின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஹா லாங் பேவை தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் நிலப்பரப்பு வெளியீட்டில் பட்டியலிட்டது. எனவே எப்போதாவது வியட்நாம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் இந்த இடத்துக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று நானும் என்னுடைய நண்பனும் முடிவு செய்தோம். இந்த கொரோனா வந்து எங்களை அங்கு போகவிடாமல் செய்து விட்டது. திரும்ப எப்போது வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லை.