ஆண்கள் உஷாராகப் பதிலளிக்க வேண்டிய சில கேள்விகள்…
 • 23:08PM Nov 18,2017 Chennai, Tamil Nadu 600003, India
 • Written By KV
 • Written By KV
 • 23:08PM Nov 18,2017 Chennai, Tamil Nadu 600003, India

       மனைவியோ, காதலியோ – பெண்கள் எப்போதுமே ஒரே மாதிரிதான். சிலருக்கு எப்படிப் பொய் பேசினாலும், எப்படி மாட்டிக் கொள்கிறோம் என்று கூடக் குழம்புவது உண்டு.  காரணம், பெண்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு, கொஞ்சமும் யோசிக்காமல் பதிலளிக்கிறேன் பேர்வழி என்று ஆண்கள் உளறிக் கொட்டுவதுதான்.  கேள்விகளின் மூலமாகவே நடந்தவற்றைப் புரிந்து கொள்ளும் திறமை அநேகமாக எல்லாப் பெண்களுக்குமே உண்டு.  அப்படி உஷாராகப் பதிலளிக்க வேண்டிய கேள்விகள்.

 1. “உங்க ஆபிசுல அந்தப் பொண்ணு, அவ பேரு கூட…” அலுவலகத்தில் உங்களுக்கு நெருக்கமான பெண் யாரென்று தெரிந்து கொள்ளக் கேட்கப்படும் கேள்வி இது.  அலுவலகம் என்றதும் உங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது எது என்பதையும் தெரிந்து கொள்வார்கள்.
 2. “என்ன சார் இன்னைக்கு செம ஜாலியா இருக்கீங்க போல…” உங்கள் நடவடிக்கை சரியில்லை என்பதன் மறைமுக உணர்த்துதல் இது.  இன்னமும் தெளிவாகச் சொல்லப் போனால் – ஐ யாம் வாட்ச்சிங் என்ற சொல்லாடலின் பெண்பால் பதிப்பு இது.
 3. “எனக்குத் தெரியுமா அவங்களை…” ஏன் அந்த நபரைப் பற்றி இதுவரை என்னிடம் சொல்லவில்லை.  எனக்குத் தெரியாமல் அப்படி என்ன இருக்கு அந்த நபரிடம். அது பெண்களாக இருந்தால், உடனடியாக சந்தேக வளையத்தில் கவனிக்கப் படும் நபராகி விடுவீர்கள்.
 4. “ஆபீசுல OT எல்லாம் உண்டா???” மவனே, நீ தினமும் லேட்டா வர்றது, கேட்டா ஆபீசுல வேலை ஜாஸ்தின்னு சொல்றதை நான் நம்பலை… பார்த்து இருந்துக்கோ…
 5. “என்ன ஸ்மெல் இது, புது பெர்ப்யூமா???” பெரும்பாலும் தவறு செய்யும் ஆண்கள் முதலில் இதில்தான் மாட்டிக் கொள்வார்கள்.  மனைவி கவனிக்காத நேரம் சட்டையை முகர்ந்து பார்ப்பது, ஆபீசுல பழைய ப்ரெண்ட் என்று கதை விட்டால் நிச்சயம் அடிதான்.  பெண்கள் பெர்ப்யூமிற்கும், ஆண்கள் பெர்ப்யூமிற்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்குப் பெண்கள் முட்டாள்களில்லை.
 6. “வரும்போது டின்னர் வாங்கிட்டு வர முடியுமா???” இது கேசுவலாகத் தோன்றினாலும், வீட்டிற்குத் தெரியாமல் நீங்கள் எத்தனை வரவு செலவுகளைத் தனியே செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. சொல்லும் போதெல்லாம் மறுபேச்சு பேசாமல் வாங்கி வந்தால் நீங்கள் தனியே ரிசர்வ் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.
 7. “என்ன திடீர்னு???”  உன் கேரக்டர்லயே இல்லாத வேலையை செஞ்சிட்டிருக்கீங்க.  சம்திங் ஃபிஷ்ஷி…
 8. “அந்தச் சொந்தக்காரன்/காரியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க???” அவன் ஏதோ வில்லங்கம் செய்து இருக்கிறான்.  இவருக்கு ஒருவேளை தெரிஞ்சிருக்குமோ…
 9. “உங்களுக்கு ரொம்பப் பழக்கமோ???” ஒருவேளை வீட்டிற்கு வந்து சென்ற நண்பர்களில் யாரையாவது பற்றி இந்தக் கேள்வி வந்தால், அவன் நடவடிக்கை சரியில்லை என்று அர்த்தம்.  அநேகமான இது அவனை வீட்டிற்குக் கூட்டி வர வேண்டாம் என்பதைத் தாண்டி அவன்கூட அளவா வச்சுக்கோங்க என்பதில்தான் வந்து நிற்கும்.
 10. “இன்னைக்காவது லீவு போட முடியுமா???” நீங்கள் மனைவியுடன் சரியாக நேரம் செலவழிப்பதில்லை, கடுப்பாக இருக்கிறது என்பதுதான் பொருள்.  நீங்கள் எந்த விஷயங்களுக்காக லீவு போடுகிறீர்கள் என்பது கண்காணிக்கப்படுகிறது என்பதன் எச்சரிக்கை.
 11. “ஞாபகம் இருக்கா, கல்யாணம் ஆன புதுசுல…” நீங்கள் முன்பு போல இல்லை. எனக்கும் கவனம் தேவைப்படுகிறது என்பதுதான் இதன் அர்த்தம்.  அடிக்கடி பழைய நினைவுகளைப் பற்றிக் கணவரிடம் பேசும் பெண்களுக்குத் தான் தனிமைப் படுத்தப்பட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

பொதுவாகப் பெண்கள் கேட்கும் நிறையக் கேள்விகள், திருமணமானவர்களுக்கு மிகவும் பரிச்சயம் என்பதால் பொதுவான கேள்விகள் இந்தக் கட்டுரையில் இடம் பெறவில்லை.  இப்பொழுதெல்லாம் காதலிக்கும் போதே ட்ரெய்னிங் ஆரம்பித்து விடுகிறது.  அவை இல்லாமல், இது போன்ற கேள்விகளால் எந்த அளவுக்கு உங்களைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்பதைத் தெரியப்படுத்தவே இந்தப் பதிவு.    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top