#Ground Nut : உடல் வலிமை பெற இதை சாப்பிடுங்க !!!
  • 16:23PM May 03,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 16:23PM May 03,2019 Tamil Nadu

உடல் வலிமை பெற வேண்டும் என்றால் பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு சாப்பிட சொல்வார்கள் ஆனால் உண்மையில் நம்ம ஊர் வேர்க்கடலையில் அதை விட அதிக சத்துக்கள் உள்ளன இக்கரைக்கு அக்கறை பச்சை என்பது போல நாமும் நம்ம வேர்க்கடலையை விட்டுவிட்டு பாதாமையும் பிஸ்தாவையும் தேடிப்போகிறோம்

gro.jpg

வேர்க்கடலையில்  நார்சத்து., புரத சத்து., கார்போஹைடிரேட்., பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளது. வேர்க்கடலையில் உள்ள  நல்ல கொழுப்புக்களின் காரணமாக நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது ,இதன் மூலமாக நமது மூளையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது .உண்மையில் பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பை விட வேர்க்கடலையில் தான்  அதிகளவு நன்மைகள் உள்ளது.

gro1.png

வேர்க்கடலையை சாப்பிட்டுவந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கப்டுகிறது.மேலும்   வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

gro2.JPG

இதுமட்டுமல்லாது இரத்தத்தின் ஓட்டமானது சீர்படுத்தப்பட்டு., வேர்க்கடலையில் இருக்கும் புரதச்சத்தின் காரணமாக கர்ப்பப்பை பிரச்சனை நீங்கி., பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல வழிவகை செய்து வழங்குகிறது. தினமும் உண்ணும் உணவில் கூட சிறிதளவு வேர்க்கடலையை .பயன்படுத்தலாம் .

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top