Exquisite

இது தாங்க ஒரிஜினல்... இயற்கை ஆர்வலர்கள் காட்டும் புதிய பசுமை பாதை..! | Real Green Road Corridors

Aug 14 2018 08:25:06 AM

your image

 

இந்தியாவை பொருத்தவரை பெருகி வரும் மக்கள் தொகை, அதீத தொழில் வளர்ச்சி, திடீர் நகரமயமாதல் போன்றவற்றின் காரணமாக பல லட்சம் மரங்களும், இயற்கை வளங்களும் அழிக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக வாடிக்கை நிகழ்வாகிவிட்டது.

இத்தகைய சூழலில் தான் பாதிப்பின் தீவிர தன்மையை உணர்ந்து மும்பையில் உள்ள பசுமை ஆர்வலர்கள் இணைந்து எங்கெங்கு காலி இடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று இயற்கை எழில் கொஞ்சும் பசுமை வளாகம் போன்று அமைத்து நகரையே பச்சை பசேல் என்று மாற்றி வருகின்றனர். 

இதற்கு விதையாக இருந்த ஒரு நிகழ்வு இந்தியாவிற்கு வெளியேயும் அரங்கேறியுள்ளது. LONDON மாநகரில் metropolitan காரணமாக அழிக்கப்பட்ட பல இயற்கை வளங்களை மீட்கவும், சிறிய அளவிலான Gverrilla Gardening movement என்ற இயக்கம் துவங்கப்பட்டது.

இதில் அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து பயன்படாத, புறக்கணிக்கப்பட்ட இடங்களில் மரங்கள், தோட்டங்களை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

இதேபோல் MUMBAI-யில் உள்ள பசுமை ஆர்வலர்கள் இணைந்து Rebel gardeners மாறி காலி இடங்களில் மரங்களை தோட்டங்களை அமைத்து வருகின்றனர்.

Friends who recover the green world என்ற குழுவை உருவாக்கி செயல்படத் துவங்கியுள்ள Green enthusiasts மும்பை நகரைச் சுற்றி உள்ள காட்டு பகுதிகளிலும் மரம் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழமையான ஜப்பானிய முறையான seed balls உருவாக்கி சிறிய ரக Aerial car-களை கொண்டு மலைகள், மரங்கள் இல்லாத காடுகளில் விடுமுறை நாட்களில் வீசி வருகின்றனர்.

இதனை தவிர Green enthusiasts பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு Work Shops வாயிலாக, எவ்வாறு பழங்களை சாப்பிட்டபின் விதைகளை சேகரிக்க வேண்டும், அதனை கழிவுகளாக கருதாமல் வளர்க்க வேண்டும் எனச் சொல்லித் தருகின்றனர்.

இவ்வாறு மும்பை நகரின் Green enthusiasts இணைந்து மும்பை அருகில் 100 காடுகளை உருவாக்கிட செயல்திட்டம் தீட்டி ஒருங்கிணைந்து பணி செய்து வருகின்றனர்.

இந்த முயற்சியில் இயற்கையான Agricultural inputs-களைப் பயன்படுத்தி நமது நாட்டு ரகங்கள் அதிகளவில் வளர்க்கப்படுவதால் அவை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எளிதாக இலக்காவது கிடையாது.

மேலும் பலதரப்பட்ட விதைகள், மரங்கள் நடப்படுவதால் பலதரப்பட்ட பறவைகளும் வந்து இங்கு ஒரு natural green environment உருவாக்கப்பட்டு நமது இயற்கை வளங்கள் பெருக்கப்படுகிறது.

இவ்வாறு நமது நாட்டில் உள்ள அனைத்து தரப்பு பெரு நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பசுமை இயக்கங்கள் துவங்கப்பட்டு மக்கள் ஒருசேர இணைத்து செயல்பட்டால், பசுமை வளங்களை பாதுகாக்கவும், புதியதாக உருவாக்கவும் முடியும் என்பதில் சந்தேகமில்லை.