Highrise

இந்த இடத்துக்கு பச்சை கதவு என்ற பெயர் ஏன் வந்தது? அமெரிக்காவுல இருக்கறவங்க மட்டும் ஏன் வினோதமான பெயர்களை தேர்வு செய்யறாங்க?

Sep 08 2021 05:05:00 PM

கொரோனா ஊரடங்கின்போது தாயக்கட்டையை உருட்டி சலிப்படைந்து போனதால் ஒரு நாள் இரவு அமெரிக்காவில் வசிக்கும் என்னுடைய தோழி ஒருவரிடம் கடலை போடலாம் என்று நினைத்து முகநூலில் ஒரு ஹாய் சொன்னேன். அவுங்களும் பதிலுக்கு ஹாய் டா! எப்படி இருக்க? என்று கேட்டாங்க.

green-door-tavern united-states

உங்க ஊருல கொரோனா எப்படி இருக்கு? கொரோனா முடிந்தபிறகு ஹோட்டலுக்கு சென்று சாப்பாட்டை வெளுத்துக்கட்டணும் என்று ஆசை வந்தால் நீ எங்கு செல்வாய் என்று கேட்டேன். அதற்கு என்னுடைய தோழி ஒரு ரெஸ்டாரண்டை பத்தி கதை சொல்ல ஆரம்பித்தாள். கேட்டு முடிக்கிறதுக்குள்ள 12 மணி ஆயிடுச்சுங்க. சரி நான் நாளைக்கு பேசுறேன் என்று சொல்லிவிட்டு படுத்துகிட்டேன். அந்த அம்மணி சொன்ன அந்த அற்புத ஹோட்டலை பற்றி உங்களுக்கு சில தகவல் சொல்றேன் கேளுங்க.

green-door-tavern united-states

க்ரீன் டோர் டேவர்ன் சிகாகோவின் புகழ்பெற்ற பழமையான உணவாக நிறுவனம் ஆகும். இது 1921 இல் திறக்கப்பட்டது. இந்த கட்டிடம், கிரேட் சிகாகோ தீ விபத்து ஏற்பட்ட ஒரு வருடம் கழித்து ஜேம்ஸ் மெக்கோல் என்பவரால் 1872 இல் கட்டப்பட்டது.

green-door-tavern united-states

இந்த கட்டிடத்தின் குத்தகைதாரர் லாரன்ஸ் பி. எல்க் தரை தளத்தை மளிகைக் கடையாகப் பயன்படுத்தி மேல் மாடியில் வாழ்ந்தார். இது 1921 ஆம் ஆண்டில் ஹுரான்-ஆர்லியன்ஸ் உணவகமாக மாற்றப்பட்டது.

green-door-tavern united-states

1930 களில் இந்த இடம் "தி கிரீன் டோர்" என்ற புனைப்பெயரைப் பெற்றது. இறுதியில் இந்தப்பெயர் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கட்டமைப்பு அதன் ஆரம்ப ஆண்டுகளில், அப்போது பயன்படுத்தப்பட்ட கட்டுமான உத்திகள் காரணமாக ஒரு மெலிந்த தன்மையை உருவாக்கியது.

green-door-tavern united-states

இந்த அம்சமே இந்த உணவகம் பிரபலமாவதற்கு காரணமாகவும் அமைந்துபோனது. மிருதுவான மாட்டிறைச்சி சாண்ட்விச், ஜிடிடி புட்டின் ஆகியவை இந்த உணவகத்தின் சிறப்புமிக்க உணவுகளாகும்.