Exquisite

எத்தனையோ மர்ம முடிச்சுகள் இருந்தாலும் இந்த நாட்டில் ஒளிந்திருக்கும் மர்மம் குறித்து உங்களுக்கு தெரியுமா ?

Apr 12 2021 07:49:00 AM

பலவிதமான விநோத கற்பனைகள் நெடுங்காலந்தொட்டே மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. அப்படி ஒரு கற்பனையினால் ஜப்பான் நாட்டின் ஈடோ நகரம் பேரழிவை சந்தித்தது.

kimano-dress-mystry

1657ம் ஆண்டில் அந்த நகரத்தை சேர்ந்த 3 பெண்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த மரணம் குறித்து ஆய்வு நடத்திய மதகுருமார்கள் ஒரு விசித்திரமான காரணத்தை கூறினர். அவர்கள் அணிந்திருந்த உடையினால் தான் மரணம் அடைந்ததாக தெரிவித்தனர். அந்த பெண்கள் அணிந்திருந்த உடை கிமோனோ என்று அழைக்கப்பட்டது.

kimano-dress-mystry

அந்த உடையில் தீய சக்தி இருப்பதால் அது மேலும் பல பெண்களை கொன்றுவிடக்கூடாது என்பதற்காக அதை தீயிலிட்டு கொளுத்தினர். அந்த தீயானது அந்த நகரம் முழுவதும் பரவி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. 75 சதவீத நகர பகுதிகள் நெருப்பில் எரிந்து சாம்பலானது. மேலும் இந்த தீயினால் சுமார் 1 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஜப்பான் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய இந்த சம்பவம் கிரேட் பயர் ஆப் மெய்ராக்கி என்று அழைக்கப்படுகிறது.