#donation : அடுத்து தமிழர்கள் இல்லா தமிழகமா.? திருப்பூரில் அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம் - கொதித்து பொங்கும் சமூக ஆர்வலர்.!
  • 18:39PM Jun 28,2019 Tiruppur
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 18:39PM Jun 28,2019 Tiruppur

ஒரு சிலர் திருப்பூரில் 60 வருடப் பள்ளிக் கூடத்திற்கு ஒரு புதிய கட்டிடத்தை எழுப்பப் பொருளாதார உதவி செய்து உள்ளார்கள். பொருளாதார உதவி செய்தவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால், இந்த பள்ளிக்கூடம் “துரோணா பாடசாலா” என்ற பெயர் சூட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். தமிழகத்திலே இதுவரை நடைபெறாத ஒரு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

வடஇந்திய மக்கள் ஊரிலே தொழில் செய்வதை விடத் தமிழகத்தில் தொழில் செய்வதற்கான நல்ல சூழல், வர்த்தகம், தொழில் முனைவோருக்கான வாய்ப்பு, தொழிலாளர்கள் போன்ற பல விதமான வாய்ப்பு அமையப் பெற்றதால் தமிழகத்திலே தொழில் செய்தார்கள். அந்த தொழிலில் ஈட்டும் லாபத்தில் ஒரு நல்ல எண்ணத்திலே, சமூக அக்கறையினால் (CSR) மற்றும் ROTARY என்னும் உலக அமைப்பின் மூலம், அந்த தொகையை அரசுப் பள்ளி மேம்பாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்திலே கட்டிடங்கள் எழுப்ப முன் வந்து உள்ளனர்.

ஆனால் பணம் வசூலிக்கப்பட்டது ROTARY CLUB மூலம். அனைத்து மொழி கலாச்சாரம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகப் பணம் கொடுத்து இருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்குப் பிடித்த பெயரை வைத்தோம் எனக் கல்வித் துறை கூறுவது மிகவும் வருத்தம் அளிக்கின்றது.

அப்படி என்றால் தமிழகம் கர்நாடகா , மகாராஷ்டிரா பொன்ற மாநிலங்கள் தான் இந்திய நாட்டிற்கே மொத்த வருமானத்தை ஈட்டித் தருகின்றது. எனவே பெரியார், அண்ணா, திருவள்ளுவர் பெயர்களிலும், சங்க இலக்கிய மன்னர்கள் பெயர்களிலும் உத்திர பிரதேஷ், பீகார், மத்திய பிரதேஷ் மாநிலங்களிலும் பெயர் வைப்பார்களா.? நாங்கள் கொடுக்கும் பணத்தில் தானே நீங்கள் பிழைக்கிறீர்கள்.? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நீக்கும் அளவிற்கு செய்துள்ளார் சமூக ஆர்வலர் கார்த்திகேயன் சிவசேனாதிபதி.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top