#liquor card: மொடா குடிகாரர்களுக்கு வந்தாச்சு ஆப்பு - தடா போட்ட பலே ஐடியா! கண்ணீர் வடிக்கும் குடிமகன்கள்!
  • 13:19PM Apr 10,2020 Andhra Pradesh
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:19PM Apr 10,2020 Andhra Pradesh

இங்க எல்லாம் டெய்லி நாலு ரவுண்டு, அஞ்சு ரவுண்டு என்று போய் நிலையில், ஆந்திர மது ஒழிப்பு விவகாரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பார்க்கிற வரைக்கும் பார்த்துட்டு இதெல்லாம் சரிபட்டு வராது என்ற முடிவுக்கு வந்த ஆந்திர அரசு ஏடிஎம் கார்டு மாதிரி ஒரு அட்டை விடலாமே என்ற முடிவுக்கு வந்துள்ளது. liquor card என்று பெயரிடப்பட்ட அதில், சிம் கார்டு போல மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளது. சரி இதுல என்ன இருக்க போகுது ஒரே நாள்ல ஸ்வைப் பண்ணிட்டு, மறுபடியும் காசு போட்டுக்கலாம் தானே.? என்ற சந்தேகம் நம்ம ஊரு குடிமகன்களுக்கு எழும்.

இருடா ராசா வரேன்.. என்று அந்த இடத்தில் செக் வைக்க களமிறங்கியிருக்கிறது ஆந்திர அரசு. இந்த கார்டு வாங்க வேண்டும் என்றால் முதலில் 25 வயது நிரம்பியிருக்க வேண்டுமாம். அது மட்டும் போதாது ஆதார் கார்டு, பான் கார்டு கொடுத்து ஆக்டிவேட் செய்தால் தான் பயன்பாட்டுக்கே வரும். ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் வரைக்கு தான் லிமிட். மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்வதை போல செய்து கொள்ளலாம். அதிலும் ஒரே நாளில் 5 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்கிவிட முடியாது.

ஒரு நாளுக்கு 3 பாட்டில் தான் லிமிட். அதுக்கு மேல அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் பண்ணினாலும் கிடைக்காது. நம்ம ஊரில் வாங்கும் சம்பளம் முழுவதையும் குடிக்கே செலவிட்டு பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்ததை பார்த்திருப்போம். இந்த திட்டம் இங்கும் நடைமுறைக்கு வந்தால், கொஞ்சம் காசாவது வீட்டு சென்று சேரும் என்று நினைக்கின்றனர் குடும்ப தலைவிகள். ஆந்திராவில் ஏற்கனவே மது விலை உயர்த்தப்பட்ட நிலையில், மது விற்பனை குறைந்தாலும் வருமானம் அப்படியே தான் இருக்கிறதாம்.| #A2milk: பாக்கெட் பாலா? பால் கேன் பாலா? காலங்காத்தால ஈரோடு விவசாயி பட்ட அவஸ்தை!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top