#GOVERNMENT: அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த, வரப் போகும் திட்டங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா???
  • 15:53PM Oct 05,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:53PM Oct 05,2019 Chennai

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் கல்லூரிகளுக்கு இணையாக அரசுக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த நடத்தப்படும் பல்வேறு முயற்சிகளையும், இனி வரவிருக்கும் அறிவிப்புகளையும் சேர்த்து இப்போது பார்க்கலாம். இதைச் சரியான விதத்தில் நடைமுறைப்படுத்தினால், அரசுக் கல்விக் கூடங்களும் தனியாருக்கு நிகராக வசதி படைத்ததாக மாறலாம். ஆனால், மாணவர் சேர்க்கைக்கு உதவுமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். இனி அறிவிப்புகளைப் பார்க்கலாம்.

#1. அரசுக் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் பாதுகாப்பு கருதி, 90 அரசு கல்லூரிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

#2. 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் COMPUTER பாடப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய COMPUTER-கள், உபகரணங்கள் வழங்கப்படும்.

#3. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 400 ரூபாய், வரும் கல்வியாண்டு முதல் ரூ.900 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 47,072 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

#4. அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் HONOURARY PROFESSOR-களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும்.

#5. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களுக்கு, கற்பிக்கும் திறன் மேம்படுத்தப் பயிற்சியளிக்கப்படும்.

#6. உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 UNIVERSITY-களுக்கு, ஆராய்ச்சி நிதியாக ஆண்டுதோறும் தேவைக்கேற்ப ரூ.25 கோடி வரை வழங்கப்படும்.

#7. சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில், M.E. COMMUNICATION SYSTEM என்ற POST GRADUATE COURSE துவங்கப்படும். இதற்காக 3 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

#8. அறிவியல் தொழில்நுட்ப, மாநில மன்றத்தால் செயல்படுத்தப்படும் அறிவியல் கருத்தரங்கு மற்றும் பயிற்சிப் பட்டறை நடத்த, பகுதி நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.

#9. ஆராய்ச்சி மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த ரூ.15 லட்சம் நிதி, ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

#10. அறிவியல் நகரம் மூலம் கிராமப்புற கண்டுபிடிப்பாளர்களுக்கு, கிராமப்புறப் புதுமை விருது வழங்கப்படும்.

#11. அறிவியல் நகரம் மூலம் 10 சிறந்த ஆசிரியர்களுக்குத் தலா ரூ.25 ஆயிரம் சன்மானம் கொண்ட விருது வழங்கப்படும்.

#12. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, BRITISH COUNCIL உடன் இணைந்து, ஆங்கிலம், வேலைவாய்ப்புத் திறன்களுக்கான ஒருங்கிணைந்த கற்றல் பயிற்சி அளிக்கப்படும்.

#13. வேறு பயனுள்ள இணைப்புகள்:  |  Caste Discrimination  |  Telangana Schools  |  Abroad Admissions  |  Backtrack Record  |  Small Commando Warriors  |  

#GOVERNMENT கொண்டு வர இந்த விஷயங்கள் வரவேற்கத்தக்கதுதான். மேலும், இது போன்ற பல அரசு உதவிகள், கல்விக் கடன், SCHOLARSHIP-கள் பற்றி அறிய:– SCHOLARSHIP PORTAL, MHRD SCHOLARSHIPS, INDIAN SCHOLARSHIPS, FORD FOUNDATION, DHE, BUDDY 4 STUDY, SCHOLARSHIP PORTAL, WE MAKE SCHOLARS, INDIA SCHOLARSHIPS, SCHOLARSHIPS INDIA, EDUCATIONAL LOANS, PAGE EDUCATION, VIDYALAXMI.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top