#SCULPTURE: இப்படி ஒரு BACHELORS DEGREE இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்???
  • 15:51PM May 04,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:51PM May 04,2019 Chennai

பல்லவர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் குகைக்கோயில், குடவரைக் கோயில்கள் மற்றும் சிற்பக்கலைக்கு ஆதாரமாக விளங்குவது பல்லவர்களின் கலை நகரமாக இருந்த மாமல்லபுரம். அதே மாமல்லபுரத்தில் சிற்பக்கலைகளைக் கற்றுத் தருவதற்காக, அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய நான்காண்டு BACHELORS DEGREE COURSE-கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. B.TECH IN TRADITIONAL ARCHITECTURE, BACHELOR OF FINE ARTS IN TRADITIONAL SCULPTURE (கற்சிற்பம்/ சுதைச் சிற்பம்/ மரச்சிற்பம்/ உலோகச் சிற்பம்), BACHELOR OF FINE ARTS IN TRADITIONAL DRAWING AND PAINTING ஆகிய COURSE-கள் இங்கு கற்றுத் தரப்படுகின்றன.

B.TECH படிப்பில் சேர விரும்பும் மாணவர் PLUS 2-வில் MATHS-ஐ முக்கிய பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது அவசியம். BFA படிப்புகளில் சேர விரும்புவோர் PLUS 2-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 1-ஆம் தேதி கணக்குப்படி GENERAL CATEGORY 21 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். SC, ST, BC, OBC வகுப்பினைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும். மூன்று படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பத்தை அனுப்பலாம்.

GENERAL CATEGORY-க்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100. SC, ST, BC, OBC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 50. விண்ணப்பக் கட்டணத்தைத் திருக்கழுக்குன்றம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மாற்றத்தக்க வகையில், கல்லூரி முதல்வர் பெயருக்கு DEMAND DRAFT எடுத்து, நேரில் கொடுத்தோ அல்லது தபால் மூலம் அனுப்பியோ விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி தேதி: 30.06.2019. தொடர்புக்கு: முதல்வர் (பொ), அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரி, மாமல்லபுரம் - 603104. தொலைபேசி: 044-27442261. கலை மற்றும் நுண்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!!!

Engineering Admission Preperation  |  Visual Arts - Media  |  Trending Courses  |  Best Engineering College  |  University of Birmingham  |

Top