Lushgreen

தமிழ் சினிமாவில் நடித்த வித்தியாசமான பிரபலம் யார்?

Jul 08 2021 03:05:00 AM

நம் தமிழ் மக்கள் எப்போதும் சினிமாவையும், வாழ்க்கையையும் பிரித்து பார்க்கமாட்டார்கள். எல்லாமே ஒன்றுதான், திரையில் தோன்றுவதைப்போல நிஜத்திலும் இப்படித்தான் நடக்கும் என்று நினைப்பார்கள். இதன் காரணமாகத்தான் எம்.ஜி.ஆர். முதல் கமலஹாசன் வரை எல்லா சினிமா பிரபலங்களும் அரசியலில் ப*யப்படாமல் மக்கள் ஆதரவு நமக்கு கிடைக்கும் என்று இறங்கினார்கள். ஒரு நடிகர் ஓட்டு போட சென்றால் அவருடன் போட்டோ எடுக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கே கூடுகிறார்கள்.

goundamani different from others

புதிதாக திறக்கும் நகைக்கடைக்கு ஒரு நடிகை வந்தால் அவரைப் பார்க்க கூட்டம் கூடுகிறார்கள். அவங்க அந்த கடையை திறந்தால் காசு கொடுப்பாங்க. அங்கே போய் கூட்டம் கூடினால் அ*டி வாங்குவது தான் மிச்சம். ஒரு பிரபல நடிகரின் கார் தெருவில் சென்றாலே அவருடன் போட்டோ எடுக்க ரசிகர்கள் கூடுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும்போது அதை ஆதரித்து சிலரும், எ*திர்த்து சிலரும் சப்போர்ட் செய்கிறார்கள்.

goundamani different from others

நடிப்பது என்பது மட்டும்தான் அவர்களின் தொழில். அவர்களும் நம்மை போல மனிதர்கள் தான். நாம வேலைக்கு போனா எப்படி சம்பளம் குடுக்குறாங்களோ அதே மாதிரிதான் அவங்க நடிச்சா மட்டும்தான் அவங்களுக்கு சம்பளம் கொடுக்குறாங்க. அதைவிட்டுவிட்டு அவங்களுக்கு பிளக்ஸ் அடிப்பது, படம் வெளியாகும்போது பாலபிஷேகம் செய்வது இவை அனைத்தும் மு*ட்டாள் தனமானது. மற்ற பிரபல நடிகர்களில் இருந்து கவுண்டமணி முற்றிலும் வேறுபட்டவர்.

goundamani different from others

தன்னை பார்க்க யாராவது ரசிகர்கள் வந்தால் என்னை பார்க்க எல்லாம் வராதீங்க. நான் வெறும் நடிகன் மட்டும்தான். அவங்க சம்பளம் கொடுக்குறாங்க, நான் நடிக்கிறேன் அவ்வளவுதான். மற்றபடி நான்  பெரிய ஆள் கெடையாது. போய் உங்க குடும்பத்தை நல்ல படியா பாத்துக்கோங்க என்று அறிவுரை சொல்வாராம். போ*லி புகழ்களுக்கு மத்தியில் நிறைய பிரபலங்கள் சுற்றிக் கொண்டிருக்கும் இதே நாட்டில் தான் கவுண்டமணி போன்ற பிரபலங்களும் வாழ்கிறார்கள்.

goundamani different from others