காய்ச்சலா, முதல்ல இதைப் படிங்க…
  • 14:31PM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:31PM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

டெங்கு காய்ச்சலோட போக்கு என்னன்னு தெரிஞ்சா அதுகிட்டயிருந்து தப்பிக்கிறது ரொம்ப ஈஸி… இப்போ முதல்ல உங்களுக்கு நீங்களே வந்திருக்கிறது டெங்குக் காய்ச்சலான்னு தெரிஞ்சுக்க முடியும்…

அறிகுறி 1 :   முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும்

அறிகுறி 2 :   அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும்.  ஆனா, அதுக்கப்புறம்தான் பிரச்சினை ஆரம்பிக்கும்.

அறிகுறி 3 :  ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கிறதே 4,5,6 நாட்கள்லதான்.

மூணு நாள் தகதகன்னு 100 க்கு மேல கொதிச்சுட்டிருக்கிற காய்ச்சல், 4வது நாள் சட்டுனு இறங்கிடும்.  அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு திடீர்னு 6வது நாள் மறுபடி 102 / 103 டிகிரி தாண்டி எகிற ஆரம்பிச்சுடும். மொதல் தடவை காய்ச்சல் வரும்போதே உடம்பிலுள்ள நீர்ச்சத்து குறைஞ்சு போய் உடம்பு முழுசா டீ-ஹைட்ரேட் ஆயிடும்.  அதிகப்படியான தண்ணித் தாகம், சரியா யூரின் வராம அவஸ்தைப்படுறது, எவ்வளவு குடிச்சாலும் தாகமா இருக்கிறது.  இதெல்லாம் முதல் மூணு நாள்ல இருந்தா உடனடியா டாக்டரைப் பார்த்திடுங்க…

       அடுத்த மூணு நாள்லதான் இரத்தக் கசிவு ஆரம்பிக்குது.  டூ பாத்ரூம் கருப்பா போறது, பல்லில இரத்தம் வர்றதுன்னு நடக்க ஆரம்பிக்கும்.  முதல் மூணு நாளில ப்ளட் டெஸ்ட் பெரிசா எதையும் காட்டாம போனாலும், டாக்டர் இந்த அறிகுறிகளை வச்சு கண்டுபிடிச்சுடுவாரு… 4வது நாளிலதான் இரத்தத் தட்டணுக்கள் குறையறது தெரிய ஆரம்பிக்கும்.  ஸோ, மறந்துடாதீங்க, முதல் மூணு நாள் காய்ச்சல் அடிச்சு நாலாவது நாள் இல்லைன்னா சரியாய்டுச்சுன்னு விட்ராதீங்க… கூடுமான அளவுக்கு நீராகாரம் சாப்பிட்டுட்டே இருங்க, ஏன்னா மெயின் டார்கட் நம்ம உடம்பிலிருக்கிற நீர்தான்.  அதைக் குறையாம பார்த்துக்கனும்.

       கடைசியா, ஒருவேளை டெங்குன்னு கன்பர்ம் ஆயிட்டாக் கூடப் பயப்பட வேண்டாம்.  இருக்கவே இருக்கு சீரகத் தண்ணியும், உலர் திராட்சையும்…. டாக்டர்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்தாக் கூட, நல்லா சீரகத்தை தண்ணில போட்டுக் காய்ச்சி ஆற வச்சு குடிச்சா உடம்போட நீராதாரம் சரியாகும்.  உலர்திராட்சை சும்மா ஒரு பத்து எடுத்து வாயில போட்டு, எச்சில்ல ஊற வச்சு சாப்பிடுங்க… உடம்புல குறையற தட்டணுக்களை அது மிக விரைவா திரும்பச் சரி செய்யும்…

       இந்தப் பதிவை மனசில வச்சிருந்தா போதும், டெங்கு ஜஸ்ட் மத்த காய்ச்சல் போலத்தான்.  சுலபமா எதிர்கொள்கிற வழிதான் உங்களுக்குத் தெரியுமே… நீங்க படிச்சுட்டு, யாருக்கெல்லாம் இது தெரியனும்னு நினைக்கறீங்களோ, அவங்களுக்கும் இதை ஷேர் செய்யுங்க… எல்லாரும் நல்லா இருந்தாத்தான நமக்கும் நல்லது...

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top