#Gossip : தனது காதலனை பிரிந்த பெரிய முதலாளி போட்டியாளர் !!!
  • 09:49AM Dec 05,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 09:49AM Dec 05,2019 Tamil Nadu

தனியார் தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் இருப்பது  வெற்றியின் மறுபெயரை கொண்ட  டிவிதான். இதன் காரணம் வித்யாசமான பல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து தமிழ் மக்களின் மனதை கவர்ந்துள்ளனர், அதுமட்டுமில்லாமல் ரியாலிட்டி ஷோ என்றாலே அது அந்த  டிவிதான் என தனக்கென தனி முத்திரை பதித்து விட்டனர்.அதுபோல வட நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிகழ்ச்சிதான் பெரிய முதலாளி. முதல் சீசனே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

oviya blured 1.jpg

அதில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது   மருத்துவ முத்தம் ஜோடிதான் .இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் அந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்றவர் டிராயிங் நடிகை. பெரிய முதலாளி வீட்டிலிருந்து பாதியில் வெளியேறிய பிறகு சினிமாவில் கவனம் செலுத்தினார்.அவர் நடித்த ஒரு சமூக சீர்கேடான  படத்தினால் அந்த நடிகையின்  மானம் பாதாளத்தை நோக்கிச் சென்றது.ஆனால் தனக்காகவே வாழும் அந்த நடிகை அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லைஅந்த படத்திற்கு பிறகு  அந்த நடிகைக்கு   வேறு பட வாய்ப்புகள் வரவில்லை.

oviya blured.jpg

வாய்ப்புகள் வராததற்கு தான் தனது காதலருடன் அதிகமாக ஊர் சுற்றியது தான் கரணம்  என நினைத்த ட்ராயிங்  நடிகை, தற்போது அந்த காதலரை  கழட்டி விட்டு விட்டாராம்.என்னதான் அவரின் காதலர் பெரிய முதலாளி  வெற்றியாளராக  இருந்தாலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த சந்தை சம்பந்தப்பட்ட திரைப்படம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top