#StreetDogs நாய் என்றால் உங்களுக்குப் பிடிக்குமா? அப்போ ஒரு நிமிடம் இந்த விடியோவை பாருங்க!
  • 20:50PM Oct 28,2019 Mumbai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 20:50PM Oct 28,2019 Mumbai

இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் தெரு நாய்கள் தொந்தரவும் ஒன்று. நாம் வேகமாக வண்டியோட்டி செல்லும்போது திடீரென ஒரு தெரு நாய் நமது வண்டி முன்பு எகுறும், அதேபோல இரவில் தனியாகச் செல்லும்போது இந்தத் தெருநாய்கள் ஒன்றுகூடி நம்மைக் குரைத்து பயமுறுத்தும். ஒரு சிலர் இந்த நாய்களின் தொந்தரவுகளை நிறுத்த சோற்றில் விஷம் கலந்துகூடக் கொன்றுவிடுகின்றனர். வட மாநிலங்கள் சிலவற்றில் பொதுமக்களின் புகாரால் கார்ப்பரேஷன் நிறுவனத்தினரே இந்தத் தெருநாய்களை ஊசிபோட்டு கொன்றுவிடுகின்றனர். நமக்கு எந்தத் திங்கும் செய்யாமல் ரோட்டில் ஒரு ஓரமாக இருக்கும் இந்த ஜீவன்களுக்குச் சோறு வைப்பதை தாண்டி அவற்றை அடித்துக் கொடுமைப்படுத்துவது, துன்புறுத்துவது என்று மோசமான வேலைகளைச் செய்கிறோம்.

#Cockroach கரப்பான் பூச்சியைக் கொல்வதற்கு, கார்டனை அழித்த அதிபுத்திசாலி! வைரல் வீடியோ!

#AStreetDog’sLife

இதுபோன்ற செயல்களைத் தடுப்பதற்காக மும்பையைச் சேர்ந்த Animal Care and Adoptions organization ஒரு விடியோவை உருவாக்கியுள்ளனர். Gopro கேமராவை ஒரு தெரு நாயின் கழுத்தில் கட்டிவிட்டு அதன் நடவடிக்கையையும், மக்களின் வன்மத்தையும் தெளிவாக எடுத்துள்ளனர். இந்த விடியோவை பார்க்கும் பலரும் தெருநாய்களை மனிதர்கள் எவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். வீட்டில் வளர்க்கும் நாயை போன்றவை தான் இவையும், ஆனால் இவற்றின் மீது ஏன் இவ்வளவு வன்மம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விடியோவை யூடியூப் தளத்தில் மட்டும் 7 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top