#Google Toilet: போற வழியில அவசரமா.? அதுக்கும் வழி பண்ணி கொடுத்த google - பக்கா பிளான்!
  • 12:16PM Jul 13,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:16PM Jul 13,2019 India

சொந்த ஊருல இருக்கவங்களுக்கு எந்த எந்த இடம் எங்க இருக்குன்னு தெரியும். இதுவே புதுசா ஒருத்தர் அந்த ஊருக்கு வராருன்னு வெச்சுக்குவோம், ஒரு ஹோட்டல் கடையில ஆரம்பிச்சு பெரிய பெரிய கடை வரைக்கும் விசாரிச்சு தான் போவாங்க. ஹோட்டல், டீக்கடை, லாட்ஜ் இந்த மாதிரி இடம் எல்லாம் கூச்சப்படாம கேட்டு போயிருவாங்க. ஆனா ஆத்திர அவசரத்துக்கு எங்க போறதுன்னு தெரியாம, பக்கத்துல இருக்கறவங்க கிட்டயும் கேக்க முடியாம ஒரு வழி ஆயிருவாங்க.

ஒரு கடைய தேடி பிடிக்கிறது கூட ஈசி. பொறுமையா ஒவ்வொருத்தர்கிட்டயும் கேட்டு போயிறலாம். அதுவே உடல் ரீதியான அவசரம்னா கண்ட்ரோல் பண்ண முடியாது. உடனே பக்கத்துல ஏதாவது டாய்லெட் இருக்குமான்னு தான் பார்க்க தோணும். இந்த மாதிரி பிரச்சனைக்கு தீர்வு காண என்ன பண்ணலாம்னு யோசிச்ச google நிறுவனம், அதுக்கும் ஒரு திட்டத்த கொண்டு வந்து இருக்கு. அதைய google map கூட இணைச்சு வெளியிட போறாங்க.

மத்திய அரசாங்கத்தோட LOO Review பிரச்சாரத்துக்கு google நிறுவனமும் இணைந்து புது முயற்சி எடுக்க போகுது. இந்த திட்டத்துல 45 ஆயிரம் public toilet குறித்த விவரம் எல்லாம், google mapல சேர்க்கப்பட இருக்கு. கிராம பகுதியில இன்னும் பெரிய அளவுல இந்த முயற்சி முன்னெடுக்கப்படலனாலும், நகர் பகுதிகள்ல முடிஞ்ச அளவுக்கு தேடி பிடிச்சு, public toilet இருக்க இடத்த google mapல சேர்த்து இருக்காங்க. 1700 நகரங்கள்ல இதுவரைக்கும் google map public toilet வசதிய பயன்படுத்திட்டு இருக்காங்க. |  உத்திரப்பிரதேசத்தின் கக்கூஸ்களில் நாறிப்போன தமிழ்நாட்டின் மானம்!

Public toilets near me அப்படின்னு புதுசாவே ஒரு ஆப்சன் மாதிரி கொண்டு வந்து அதுல, toilet விவரம் பதிவு பண்ணி இருக்காங்க. google map-ஸின் இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. பொது இடங்களில் உள்ள பொதுக்கழிப்பறைகளின் தூய்மையும் மேம்படுத்தப்படும். இந்த ஆப் மூலமாவே மக்களிடம் கருத்து கேட்டு பொதுக்கழிப்பறைகள் மேம்படுத்தப்படுத்த இருக்காங்க. | ஒரு வீடு கூட இனி டாய்லெட் இல்லாம இருக்காது - சில ஆயிரத்துல சிக்குன்னு முடிக்கும் கண்டுபிடிப்பு!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top