#GoogleMap கூகிள் மேபில் செய்யப்படவுள்ள புதிய மாற்றம்! வாகனஓட்டிகளின் கவனத்திற்கு!
  • 14:05PM Jun 13,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 14:05PM Jun 13,2019 Chennai

கூகிள் மேப்பை பயன்படுத்திக் கார் பைக்கில் செல்லும் நபர்கள் தவறான பாதையில் சென்றால் அதற்கு மாற்று வழியைக் காண்பிக்கும் சேவையைக் கூகிள் மேப் நிறுத்தவுள்ளது. கூகிள் மேப்பில் இதுவரை குறுக்கு வழியில் செல்லும்போது, எந்தெந்த பாதையில் செல்லலாம் என்பதைத் தெளிவாகக் காட்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக டிரைவர்கள் சிலர் குறுக்கு வழியில் செல்வதாகப் பயணிகளை அழைத்துச் சென்று நகைப்பறிப்பு, பாலியல் வன்கொடுமை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்கவும், பாதுகாப்பு வசதியை அதிகப்படுத்தவும் சில அம்சங்களை மாற்றியுள்ளது.

காரில் பயணிப்பவர்கள் தவறான பாதையில் சென்றால், குறுக்கு வழியைக் காட்டாமல் "நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள்" என்று காட்டும். நீங்கள் செல்லவேண்டிய பாதையில் இருந்து தவறி 500 மீட்டர் வேறுபாதையில் செல்லும்போது இந்த எச்சரிக்கையைக் கொடுக்கும். இந்தப் புது அம்சம் விரைவில் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதேபோல இதுவரை நாம் ஒரு இடத்துக்குச் செல்லவேண்டும் என்று அந்த இடத்துக்குச் செல்லும் பேருந்து, ரயில் போக்குவரத்துக்குக் குறித்துத் தேடினால், எத்தனை மணிக்கு வரும், பயணக் கட்டணம் எவ்வளவு போன்ற விவரங்கள் வரும்.

தற்போது மாற்றப்பட்டுள்ள அம்சத்தில், எத்தனை மணிக்கு வரும், பயணக் கட்டணம் எவ்வளவு போன்ற விவரங்கள் உடன் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற விவரத்தையும் பயணிகள் தெரிந்துகொள்ளும் விதத்தில் அமைத்துள்ளனர். மேலும் டிராபிக் காரணமாகப் பேருந்து நின்று விட்டால் சிகப்பு குறியீடும், ஓடிக் கொண்டிருந்தால் பச்சை குறியீடும் காட்டும். இந்தியாவில் இந்த வசதி டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், புனே, லக்னோ, சென்னை, மைசூரு, கோயமுத்தூர், சூரத் ஆகிய நகரங்களில் முதற்கட்டமாகக் கொண்டுவரப்படவுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top