Rainforest

கூகுளை இவ்வளவு மலிவாக யாராவது வாங்க முடியுமா? சொடக்கு போடும் நேரத்தில் செய்து காட்டி மிரள வைத்த வெப் டிசைனர்!

May 04 2021 06:08:00 PM

உலகம் முழுவதும் பிரபலமான கூகுள் நிறுவனத்துக்கே ஒருவர் தண்ணி காட்டியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் எந்தவிதமான ஏமாற்று வேலையும் செய்யவில்லை. முறையாக தெளிவாக காரியத்தை முடித்து கூகுள் நிறுவனத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அவ்வளவு திறமை வாய்ந்த அந்த அற்புத மனிதர் யார் என்று பார்க்கலாம் வாங்க.

google-for-sale

அர்ஜென்டினாவில் தலைநகர் பியூனஸ் ஏரிஸை சேர்ந்த பகுதியில் வசித்து வருபவர் தான் நிகோலஸ் குரோனா. இவருக்கு வயது 30. இவர் ஒரு மிகைத்திறமையான வெப் டிசைனர் ஆவார். கடந்த வாரத்தில் ஒரு நாள் தனது வாடிக்கையாளருக்காக டிசைன் ஒன்றை செய்து கொண்டிருந்தார் நிகோலஸ். அந்த சமயத்தில் கூகுள் வெப்சைட் செயல்படவில்லை என்ற தகவல் அவருடைய அலைபேசிக்கு வந்தது.

google-for-sale

இந்த தகவல் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பதற்காக இணையத்தில் கூகுளின் வெப்சைட்டை தேடி பார்த்தார். உண்மையாகவே அந்த சமயத்தில் கூகுள் செயல்படவில்லை. இதன் பிறகு அர்ஜென்டினாவில் கூகுள் வெப்சைட்டை நிர்வகிக்கும் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டருக்கு சென்று கூகுளை தேடிப்பார்த்தார். அந்த சமயத்தில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது. அதாவது அர்ஜென்டினாவின் கூகுள் வெப்சைட்டை வாங்கிக்கொள்வதற்கான விளம்பரம் வந்திருந்தது.

google-for-sale

ஏதோ விநோதமாக நடப்பதை புரிந்துகொண்ட நிகோலஸ் வேறு யாரும் அதை வாங்குவதற்கு முன் முந்திக்கொண்டு அதில் தெரிவித்த வழிமுறைகளின்படி 270 பெசோ அதாவது இந்திய மதிப்பில் 215 ரூபாய் செலுத்தி கூகுளின் வெப்சைட்டை வாங்கினார். அதற்கான பில் அவருடைய மெயிலுக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் தங்கள் வெப்சைட்டை சில மணி நேரத்திற்கு ஒருவர் வாங்கிவிட்டார் பிறகு நாங்களே அதை திரும்ப பெற்றுக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளது.