Shoreline

பெண்கள் காலில் கொலுசு அணிவது எதற்காக என்று தெரியுமா ? கொலுசில் அடங்கியிருக்கும் அறிவியல் ரீதியான உண்மைகள் !

Apr 16 2021 10:02:00 AM

நகைகள் என்பது ஆதி காலத்தில் இருந்தே நமது பாரம்பரியத்தில் இருந்து வருகிறது. நகைகளை அணிவது வெறும் அழகுக்காக மட்டுமல்ல. அதில் ஏகப்பட்ட ரகசியங்கள் இருக்கிறது. நமது உடலில் உள்ள சில வர்ம புள்ளிகளை தூண்டுவதுதான் நகை அணிவதில் உள்ள சூட்சுமம்இது நமது உடல் உறுப்புகளை பராமரிக்க உதவியாக இருக்கிறது.

silver-kolusu-secrets

நகைகள் அணிவதில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக விருப்பம் இருக்கும். அதேபோல பெண்கள் மாதிரி அதிக நகைகள் ஆண்களால் அணிய முடியாது. பொதுவாக பெண்கள் அணியும் எல்லா நகைகளும் தங்கத்தில் இருந்தாலும் காலில் அணியும் கொலுசு மட்டும் வெள்ளியில் தான் செய்யப்படுகிறது. தங்கத்தை மகாலட்சுமி என்று பெரியவர்கள் கருதியதால் காலில் அணியும் கொலுசு, மெட்டி போன்றவற்றை தங்கத்தில் செய்யாமல் வெள்ளியில் செய்து அணிந்து வந்தார்கள் என்பது ஒரு நம்பிக்கையாகும்.

silver-kolusu-secrets

வெள்ளியில் கொலுசு அணிவதில் உள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் எப்போதும் பெண்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். வெள்ளி கொலுசு அவர்களின் குதிகால் நரம்புகளை உரசுவதினால் அவர்களை அதிகம் உணர்ச்சி வசப்படாமல் இருக்கச்செய்யும். மேலும் பெண்களின் இடுப்பை ஸ்திரப்படுத்துவதற்காகவும் கொலுசு அணிவது நடைமுறையில் உள்ளது. பெண்களின் கால்களை கவர்ச்சியாக காட்டும் வெள்ளி கொலுசு ஆயுளை விருத்தி செய்யும் தன்மை கொண்டது.