Highrise

புறாவுக்கு பெல் அடிக்கிறது பெரிய சாதனையா? அதைவிட பெரிய சாதனை எல்லாம் நிறைய பேர் செஞ்சிருக்காங்க, அதைப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க பாஸ்

May 03 2021 11:52:00 AM

விண்வெளியில் ஏகப்பட்ட சாகசங்களை நிகழ்த்தி காட்டும் நாசா அந்தக்காலத்தில் இருந்து இப்போதுவரை அனைவராலும் பாராட்டப்படும் மிக முக்கியமான நிறுவனமாகும். நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் பலரும் ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளனர்.  நிலவில் முதலில் காலடி பதித்த ஆம்ஸ்ட்ராங் பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருப்போம். ஆனால் இந்த மனிதர் நிலவில் செய்த சேட்டைகளை பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

space-golf-alan

ஆலன் ஷெப்பர்ட் என்னும் நாசாவை சேர்ந்த விஞ்ஞானி 1971ம் ஆண்டில் நாசாவின் விண்கலம் மூலம் நிலவுக்கு பயணித்தார். யாருக்கும் தெரியாமல் 2 கோல்ப் பந்துகளையும் பேட்டையும் தன்னுடன் எடுத்து சென்றுள்ளார். பிப்ரவரி மாதம் 6ம் தேதி அவர் பயணித்த விண்கலம் நிலவில் தரையிறங்கியது. பிறகு பூமியில் உள்ள நாசாவை தொடர்பு கொண்டு ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டார்.

space-golf-alan

நிலவில் முதன் முதலாக கோல்ப் விளையாடப்போகும் மனிதன் நான் தான் என்று தெரிவித்துவிட்டு நிலவின் தரையில் குழி ஒன்றை பறித்து பந்தை பேட்டால் அடித்து கோல்ப் விளையாடி மகிழ்ந்தார். அந்த சூழலையும் இந்த மனிதர் எவ்வளவு இனிமையாக மாற்றியுள்ளார் பாருங்கள். தான் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக மாற்ற இன்னொருவர் தேவையில்லை. நம்மை நாமே மகிழ்ச்சியடைய வைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் தான் ஆலன் ஷெப்பர்ட்.