Lushgreen

நம்ம ஊருல தங்கம் விக்கிற விலைக்கு ஒரு கிராம் கூட நாம வாங்க முடியாது போலிருக்கே? பேசாம இந்த இடத்துக்கு போய் உடம்புல கொஞ்சம் உரசிக்கிட்டு வந்துரலாமா?

Jun 24 2021 04:41:00 PM

எத்தனையோ அதிசயங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது. ஆனால் மிகக் குறைந்த அளவில் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்த்துள்ளார்கள். இன்று நாம் பார்க்கப்போகும் இடம் கண்டிப்பாக உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெற தகுதியான இடமாகும். இது மியான்மர் நாட்டில் அமைந்துள்ளது.

golden-rock

மியான்மர் நாட்டில் உள்ள கோல்டன் பாறை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. இந்தப்பாறையானது கடல் மட்டத்தில் இருந்து 1100 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. மிகப்பெரியதாக காட்சியளிக்கும் இந்தப்பாறையின் மீது 24 அடி உயரம் கொண்ட ஒரு பகோடா உள்ளது. நம்ம ஊருல இருக்குற வெங்காய பக்கோடா என்று நினைத்துவிட வேண்டாம். பகோடா என்பதற்கு மேற்கூரைகளை கொண்ட கோபுர வடிவிலான பௌத்த சமயக்கோவில் என்று பொருள்.

golden-rock

இந்தப்பாறை முழுவதும் தங்க இலைகளால் மூடப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு வரும் பௌத்த மதத்தை  சேர்ந்த ஆண் பக்தர்கள் பாறைகளை சுற்றி தங்க இலைகளை ஒட்டுகின்றனர். இதனால் தான் இந்தப்பாறை ஜொலிக்கும் தங்க நிறத்தில் காட்சியளிக்கிறது. புராண கதைகளின் படி இந்தப்பாறை புத்தரின் தலைமுடியில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

golden-rock

கோல்டன் பாறை பௌத்தர்களின் புனித தலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. கோல்டன் பாறைக்கு வருடத்திற்கு மூன்று முறை வந்து செல்பவர்களுக்கு அதிக அளவில் செல்வம் சேரும் என்பது பௌத்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் இங்கு வந்து தான தர்மங்கள் செய்தால் புத்தரின் அருள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மலையின் விளிம்பில் இருந்து கீழே விழ இருப்பது போல தோன்றும் இந்தப்பாறை புவியீர்ப்பு விசையை எதிர்த்து சரிவாக இருப்பது தான் உண்மையிலேயே மிகவும் அதிசயமாக இருக்கிறது.