Misc

சில தங்க நகைக் கடைகளில் மட்டும் மற்ற கடைகளை விட தங்கத்தின் விலை மிகவும் குறைவாக இருக்க காரணம் என்ன?

Sep 15 2021 05:28:00 PM

சமீப காலமாக டிவியில் ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகிறது. எங்க கடையில் தங்கம் வாங்குங்க, மற்ற எல்லா கடைகளை விட நாங்க ரொம்ப கம்மியான விலைக்கு தங்கம் தருகிறோம். மார்க்கெட்டில் எங்கேயுமே இவ்வளவு விலை மலிவாக தங்கம் குடுக்க மாட்டாங்க என்றெல்லாம் சொல்லி விளம்பரம் செய்கிறார்கள். மக்களும் இந்த விளம்பரத்தை நம்பி அந்த கடைக்கு சென்று தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.

less price gold shop

நண்பர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் அந்த பேமஸான தங்க நகைக்கடையில் தன்னுடைய மனைவிக்காக தங்கம் வாங்கினார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதே கடைக்கு சென்று இந்த தங்கத்தை போட்டுவிட்டு வேறொரு தங்கம் மாற்ற வேண்டும் என்று சொல்லியுள்ளார். அந்த தங்கத்தின் அளவு மொத்தம் 48 கிராம்.

less price gold shop

இவர்கள் அந்த தங்கத்தை அளவிட்டுள்ளனர். அதன் எடையும் 48 கிராம் இருந்தது. நாங்க இந்த தங்கத்தை உருக்கி பாத்துட்டு இதன் உண்மையான அளவை சொல்லுறோம் என்று சொல்லி உருக்கி பார்த்துள்ளனர். அப்போது அந்த தங்கத்தின் அளவு 36 கிராமாக குறைந்துள்ளது. நண்பரும் அவருடைய மனைவியும் இதைப் பார்த்து அ*திர்ச்சி அடைந்துள்ளனர்.

less price gold shop

3 வருஷம் தான் ஆகுது, அதுக்குள்ளயும் எப்படி 12 கிராம் கொறஞ்சது என்று கேட்டுள்ளனர். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, உருக்குனா இவ்வளவு தான் இருக்கு என்று அசால்டாக பதில் சொல்லியுள்ளனர். இதுல இன்னொரு முக்கியமான விசயம் என்னென்னா அந்த பேமஸான கடையில் வாங்கிய தங்கத்தை மார்க்கெட்டில் எந்த கடையிலும் வாங்க மறுத்து விட்டார்கள். விலை மலிவாக கிடைக்கிறது என்று நினைத்து அந்த கடைக்கு சென்றால் ந*ஷ்டம் தான் மிச்சம் என்று அங்கே தங்கம் வாங்கிய நிறைய பேர் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

less price gold shop