பேனர் அடித்து மோடியை வெளியில் துரத்தும் ஆந்திர மக்கள்!
  • 18:00PM Feb 09,2019 Andhra Pradesh
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 18:00PM Feb 09,2019 Andhra Pradesh

இதுவரை இந்திய வரலாற்றில் எந்தப் பிரதமருக்கும் ஏற்படாத ஒரு அசிங்கம் நமது பாரத பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மாநிலத்திற்குப் பிரதமர் வருகை தருகிறார் என்றால் அந்த மாநிலத்தில் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்படும். ஆனால் நமது பிரதமர் மோடி தென்னிந்தியாவுக்கு வருகை தருகிறார் என்றால் திறந்திருக்கும் கதவுகளும் ஓங்கிச் சாத்தப்படும். கடந்த வருடம் நம் தமிழகத்திற்கு பிரதமர் வருகை தந்த போது, எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பலூன் விட்டு, #GoBackModi என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து அவர் வருகைக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் எந்த தெற்கு மாநிலத்திற்குச் சென்றாலும் #GoBackModi ட்விட்டரில் ட்ரெண்டாகிவிடும். ஆனால் இந்த வருடம் வடக்கில் இருந்து தெற்கு வரை அவர் எங்குச் சென்றாலும் பெருமளவில் எதிர்ப்பு கிளம்புகிறது. கடந்த மாதம் மோடி தமிழகம் வந்த போது, ட்விட்டர் முதல் நெடுஞ்சாலை வரை மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அவர் இங்கிருந்து கேரளா சென்ற போது, அங்கும் #pomonemodi என்று ட்விட்டர் முதல் சாலை வரை போராட்டம் நடத்தினர். இங்கு இப்படி இருக்க நேற்று அவர் அசாம் சென்றுள்ளார், அங்கோ மோடியின் உருவபொம்மை எரிப்பு, ட்விட்டரில் #GoBackModi என அசாம் மக்கள் மோடி மேல் இருந்த முழு வெறுப்பையும் காட்டிவிட்டனர்.

ஆனால் இதைப்பற்றிக் கண்டுகொள்ளாமல் மோடி நாளை ஆந்திர மாநிலம் செல்லவுள்ளார். அவர்மேல் கொல்ல காண்டில் இருக்கும் ஆந்திர மக்கள் #GoBackModi-ஐ ஒருபடி மேல் கொண்டு சென்று அவர் வரவிருக்கும் சாலைகளில் Modi No Entry எனப் பேனர் அடித்து வைத்துள்ளனர்! அதிலும் விஜயவாடா விமான நிலையத்தின் அருகில் அதிக அளவில் பேனர்கள் வைத்துள்ளனர். அதேபோல ஆந்திர முதல்வர் சந்திரா பாபு நாயுடு நாளைத் தினத்தை கருப்பு தினமாகவும் அறிவித்துள்ளார். மோடி அவரது நாளைய திட்டத்தை மாற்றாமல்விட்டால் அவரது மானம் கப்பல் ஏறிவிடும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top