பருவ நிலை மாற்றம்!!!
  • 07:18AM Nov 09,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:18AM Nov 09,2017 Chennai, Tamil Nadu 600003, India

க்ளோபல் வார்மிங், பூமி வெப்பமடைதல், பருவ நிலை மாற்றம் இதெல்லாம் கேள்விப்பட்டிருந்தாலும் நம்மைப் பெரிதாக பாதிக்காத விஷயங்கள். ஒன்று, அது என்னவென்றே நிறையப் பேருக்குத் தெரியாது. இரண்டு, அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று நம் அரசாங்கத்திற்குத் தெரியாது.  முதலில் இது ஏன் பருவநிலை மாற்றம் என அழைக்கப்படுகிறது???  காரணம் இதன் பாதிப்பு முழுக்க பருவங்களின் மாறுதல்களை ஏற்படுத்தும் ஒரே காரணத்தால்.

அது சரி, புவி வெப்பமடைந்தால் எப்படிப் பருவங்கள் மாறும்???

பூமியில் இருக்கும் பருவங்கள் அனைத்துமே நிர்ணயிக்கப்படுவது நீரின் சுழற்சி முறையில்தான்.  கடலுக்கடியில் இருக்கும் நீரோட்டமே இதற்குக் காரணம்.  பொதுவாக, வெப்ப காலத்தில் பணி உருகுவதால் ஏற்படும் குளிர்ந்த நீர், அடர்த்தி குறைவாக இருக்கும் வெப்ப நீர் இருக்கும் பக்கம் பாய்கிறது. அப்படிப் பாயும் நீர் போகும் வழியில் வெப்பமடைந்து விடும், இப்பொழுது முதலில் இருந்து இந்தச் சுழற்சி செயல்படும்.  இப்படிச் சுழலும் நீரானது காற்றின் ஈரப்பதத்தை நிர்ணயிக்கும். அப்படி நிர்ணயிக்கப்படும் ஈரப்பதம்தான் அதற்குப் பக்கத்தில் உள்ள நாடுகளின் சீதோஷண நிலையை தீர்மானிக்கும்.

இப்போது இந்தச் சுழற்சி பாதிக்கப்படும் பட்சத்தில் உயர் காற்றழுத்தப் பகுதிகளும், குறைந்த காற்றழுத்தப் பகுதிகளும் உருவாகின்றது. பெரிய அளவில் ஏற்படும் பாதிப்புகள் எல்-நினோ மற்றும் லா-நினோ என்று அழைக்கப்படுகிறது. இவற்றுக்கு இடப்பட்டிருக்கும் மற்றொரு பெயர் பேரழிவின் இரட்டைச் சகோதரிகள்.  இதில் ஒன்றான எல்-நினோ படுத்திய பாட்டைத் தான் தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெள்ளமாகப் பார்த்தோம். வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போகும் வெப்பத்திற்கும் இதுவே காரணம். 

அடிக்கொருமுறை உலக நாடுகள் அனைத்தும் ஒரு மாநாட்டைக் கூட்டுவார்கள்.  உலகை அதிகம் பாதிக்கும் நாடுகளில் முதன்மையான அமெரிக்கா என்னால் தொழிற்சாலைகளை மூட முடியாது, வேண்டுமானால் என் பங்களிப்பாக 100 மில்லியன் டாலர்களை இதற்காகச் செலவிடுகிறேன் என்று சொல்லும். புதிய திட்டங்களை தீட்டுவார்கள், ஏற்கெனவே தீட்டிய திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள்.  அதோடு மீண்டும் அடுத்த மாநாடுதான்.

இந்தப் பிரச்சினைக்காக யாரும் தீர்வு சொல்ல முடியாததற்குக் காரணம் ஒன்றுதான். அரசின் திட்டங்களின் மூலம் இதனை நடைமுறைப்படுத்த முடியாது.  ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர இந்த அரசாலும் முடியாது.  நாம் நமது பொறுப்பை உணர்ந்து சுற்றுப்புறத்தை பாதிக்கும் நடவடிக்கைகளைக் கொஞ்சமாவது கட்டுப்படுத்திக் கொண்டும், முடிந்தளவுக்கு மரங்களை வளர்ப்பதும், அதனைப் பாதுகாப்பதையும் நம் கடமையாக கருதினால் மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக இதன் பாதிப்புகளிலிருந்து மீள முடியும்.

இப்பொழுது இருக்கும் ஒரே ஒரு கேள்வி. எத்தனை பேர் அப்படி மாறத் தயாராக இருக்கிறார்கள் என்பது மட்டுமே. 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top